மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 4)இந்த ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை தெளிவாக இத்தொடரில் விளக்கி வருகின்றோம். இந்த ஹதீஸ் நபிமார்கள், மலக்குகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்தும் நோக்குவோம். – மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளவாறு நடந்திருப்பார்களா? – நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? – இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை ...
Read More »மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 3) மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரும் ஆரம்ப காலத்தில் மறுத்து வந்துள்ளனர். இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறி மறுக்கப்படுவது தவறு என்பதை நாம் தெளிவுபடுத்தி வருகின்றோம். சென்ற தொடர்களில் நபிமார்களின் மரணம் சாதாரண மனிதர்களின் மரணத்துடன் மாறுபட்டது; மலக்குகள் மனித ரூபத்தில் நபிமார்களிடம் வருகை தந்துள்ளனர்; தன்னிடம் மனித ரூபத்தில் வந்த மலக்கை (மூஸா நபி அடித்ததைத்) திடிரென நடந்த ஒரு நிகழ்வு என்ற அடிப்படையில் ...
Read More »மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-2)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 2) சென்ற இதழின் கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்திருப்பது பற்றியும் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் அறிஞர் பீஜே அவர்களால் மறுக்கப்படுவது பற்றியும் தெளிவுபடுத்தினோம். மரணத்தைப் பொறுத்த வரையில் சாதாரண மனிதர்களின் மரணத்திற்கும், நபிமார்களின் மரணத்திற்குமிடையில் வித்தியாசம் இருப்பதையும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராமல்தான் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர். அத்துடன் ...
Read More »மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-1)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 1) குறிப்பு: சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமாவில் மறுத்துள்ள நான்கு ஹதீஸ்கள் தொடர்பான உண்மை நிலையை விளக்கும் எண்ணத்துடன்தான் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடரை நாம் எழுதினோம். அதன் முதல் கட்டமாக எழுதப்பட்ட சூனியம் தொடர்பான ஹதீஸ் குறித்த எமது தொடர்தான் முற்றுப் பெற்றது. அடுத்த பகுதியை நாம் இப்போது ஆரம்பித்துள்ளோம். சகோதரர் பீஜே அவர்கள் இது வரை தான் செய்த தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், ...
Read More »துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன. “எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம். அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) ...
Read More »ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்
ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான். இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது. ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! பெண்களுக்கும் ஜிஹாத் உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘ஆம்! போராட்டமற்ற ஜிஹாத் அவர்களுக்குண்டு. அதுதான் ஹஜ்ஜும், உம்ராவும்’ என்றார்கள். (அஹ்மத் இப்னுமாஜா) ...
Read More »பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (2)
கண்ணியத்திற்குரிய சகோதரர் PJ அவர்களுக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’ உங்களது தொடர்-2 ஐயும், ஸலபியின் மறுப்புக்கு மறுப்பையும் படித்த போது நீங்கள் உங்களுக்கு ஒரு நீதி, எனக்கொரு நீதி என்ற அடிப்படையில் எழுதியிருப்பதையும், என்னை இழிவுபடுத்துவதற்கும், உண்மைகளை மறுப்பதற்கும் பெரிதும் முயன்றிருக்கின்றீர்கள் என்பதையும் அறிந்து ஆச்சரியமடைந்தேன். ‘அவரது எந்த வாதத்திற்கும் பதில் அளிக்காமல் விடுபடவில்லை என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்’ என்று உங்களது விடை குறித்த (உங்கள் பார்வையில்) தற்புகழ்ச்சியுடன் உங்கள் மறுப்புத் தொடங்குகின்றது. அது மட்டுமன்றி சத்தியத்தை மறுத்தல், பிறரை இழிவாகக் கருதுதல் ...
Read More »பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (1)
கண்ணியத்திற்குரிய அறிஞர் பீஜே அவர்கள் எனது ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடர் கட்டுரைக்குத் தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே பதிலளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. சிலர் தமது இமேஜைப் பாதுகாக்கத் தமது மாணவர்களை விட்டே மறுப்பும், விவாதமும் செய்து வரும் இந்தக் காலத்தில், தானே பதிலளிக்க முன்வந்துள்ளமை வரவேற்கப்படவேண்டியதே! அடுத்ததாக, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘சூனியம் – கலந்துரையாடல்’ எனும் சீடியில் எனது கட்டுரை குறித்து, ‘இதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை. இதற்குச் சாதாரண மக்களே பதிலளித்து விடுவர். அடுத்து, இந்தக் கட்டுரை எந்தத் தாக்கத்தையும் ...
Read More »பத்ர் தரும் படிப்பினைகள்
இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே ‘பத்ர்’ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும். சுருக்கமான தகவல் (ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த) ‘பத்ர்’ போர் குறித்த ஒரு சுருக்கமான ...
Read More »தவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்
மனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது! ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம். இவ்வாறே, ஆதமுக்கு சுஜுது செய்ய வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஷைத்தான் மீறினான். இதில் ஆதம் நபி மறதியாக மீறினார்கள். ஷைத்தான் கர்வத்தால் மீறினான். ஆதம் நபி தவறை ...
Read More »