குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 01 ஆக்கம்: எம்.ஐ. ஹுர்ரா பின்து இஸ்மாயில் ஸலபி (மகளின் ஆக்கம்) பீடிகை குழப்பங்கள் நிறைந்த இந்த சமூக சூழலில் குழந்தைகளை நடத்தை பிறழ்வுக்கு இட்டுச் செல்லும் காரணங்கள் அதிகரித்துள்ளன. சகல திக்குகளில் இருந்தும் அவர்கள் தீமையின் பால் ஈர்க்கப்படுகின்றனர். குழந்தைகளை வழிநடத்துபவர்கள் தமது பொறுப்பையும் அமானிதத்தையும் புரிந்து குழந்தைகளின் நெறிபிறழ்வுக்கான காரணங்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் அவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விதத்தையும் தெளிந்த சிந்தனையுடன் அறிந்திருக்காவிட்டால் குழந்தைகள் சமூகத்தில் குற்றவாளிகளாகவும் குழப்பக்காரர்களாகவும் அழிந்து போகும் அடுத்த ...
Read More »அன்பான இறைவன் தண்டிக்கலாமா? | இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2
இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2 அன்பான இறைவன் தண்டிக்கலாமா? முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்| நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். அத்துடன் மறுமையில் இறைவன் ...
Read More »ஜும்ஆவும் அதானும் | பிக்ஹுல் இஸ்லாம் (39) | Article.
பிக்ஹுல் இஸ்லாம் (39) ஜும்ஆத் தொழுகை ஜும்ஆவும் அதானும் ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம்தான் பரவலாக இருக்கின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர், உஸ்மான்(ர) அவர்களது ஆட்சியின் ஆரம்பத்திலும் ஜும்ஆவுக்கு இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருகிய போது உஸ்மான்(ர) அவர்கள் ஜும்ஆவின் நேரம் நெருங்கிவிட்டதை நினைவூட்டுவதற்காக சந்தையில் ஜும்ஆ நேரத்திற்கு முன்னர் ஒரு அதான் கூறும் ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஜும்ஆவுக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம் ...
Read More »ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகுதல் (பிக்ஹுல் இஸ்லாம் (38)
பிக்ஹுல் இஸ்லாம் (38) ஜும்ஆத் தொழுகை ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகுதல்: ஜும்ஆத் தொழுகைக்கு குளித்து வாசனைகள் பூசி நல்ல ஆடை அணிந்து தயாராகுவது குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம். 04. கெட்ட வாடைகளைத் தவிர்த்தல்: பள்ளிக்குச் செல்லும் போது நல்ல வாசனையுடன் செல்வது சிறந்தது. பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அருவருப்பான வாசனைகளுடன் செல்வது வெறுக்கத்தக்கதாகும். வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு பல் துலக்காமல் செல்வது, சிகரட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் பாவித்துவிட்டுச் செல்லுதல், வியர்வை வாசம் வீசும் நிலையில் செல்வது என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். ...
Read More »அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்.
அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا ‘நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.’ (4:10) அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. ‘அநாதைகளின் சொத்துக்களை உண்பது’ என்ற வார்த்தைதான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு ...
Read More »இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு வலி (பொறுப்பாளர்) | Article 📖
பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய ‘ஷாத்’ – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சீர்திருத்தம் என்றால் பிழையை சரியாக்க வேண்டும். பாதிப்புள்ள சட்டத்தை மாற்றி ...
Read More »இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்.
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும் இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த ...
Read More »எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன? முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் பக்கம்: எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன? இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சூழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது குறைத்துக் கொண்டால் எம்மால் விற்க ...
Read More »இஸ்லாம்; விமர்சனங்களும் விளக்கங்களும்┇கட்டுரை.
விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்: இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். 01. விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த ...
Read More »திருமண வயதெல்லை┇கட்டுரை.
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு சாரார் ...
Read More »