கஞ்சத்தனம் வேண்டாம்! கண்ணே! செல்வத்தின் சிறப்பை அறியாமல் சிலர் வீண்விரயம் செய்கின்றனர். காசை நீராகக் கரைக்கின்றனர். ஈற்றில் இருந்ததையெல்லாம் இழந்து வெம்புகின்றனர். இதற்கு நேர்மாற்றமாக மற்றும் சிலர் கஞ்சத்தனம் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தைச் சேர்த்து வைத்து எண்ணி எண்ணிப் பார்ப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம் அவசியத் தேவைக்குக் கூட செலவழிக்க மாட்டார்கள். இவர்களில் பலரின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமானது. சிலர் உண்ணவும் பருகாவும் கூட பஞ்சம் பாடுவர். மாலை நேரமானதும் ஏதாவது ஒரு வீட்டிற்குச் சென்று கதை கொடுப்பர். தேநீர் குடித்து முடிந்த ...
Read More »பெண்ணே பெண்ணே! – (தொடர் 2)
வீண் விரயம் வேண்டாம்! கண்ணே! பெண் குடும்பத் தலைவி என்றும், இல்லத்தரசி என்றும் அழைக்கப்படுகின்றாள். வீட்டுக்கு அவள்தான் அரசியாம்! குடும்பத்துக்கு அவள்தான் தலைவியாம்! இல்லத்துக்கு அரசியாக இருப்பவள் பொறுப்பில்லாமல் செலவு செய்து கஜானாவைக் காலி பண்ணுபவளாக இருந்தால் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்! குடும்பம் நடு வீதிக்கு வந்து விடுல்லவா! சில பெண்களின் கையில் காசு கிடைத்து விட்டால் அவர்களுக்குத் தலை-கால் விளங்காமல் போய் விடுகின்றது. பக்கத்து வீட்டு பாத்திமாவுக்கும், அடுத்த வீட்டு ஆயிஷாவுக்கும் கலர்ஸ் காட்டுவதற்காகப் பணத்தை நீர் போல் செலவு ...
Read More »பெண்ணே பெண்ணே! – (தொடர் 1)
கண்ணே! கண்ணே! பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள். பெண்கள் ஊடாகத்தான் சமூகம் பார்க்கப்படுகின்றது! பெண்கள் மூலம் தான் சமூகம் உருவாக்கப்படுகின்றது! சமூகம் எனும் சந்ததிகள் பெண்களால் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். வார்க்கப்படுகின்றனர். இந்த வகையில் ஒரு பெண்ணில் ஏற்படும் மாற்றம் ஒரு குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற மாற்றம் ஒரு சமூக மாற்றமாக மலர்ந்து விரிகின்றது! எனவே பெண்களிடம் ஏற்படுகின்ற மாற்றம் ஆண்களிடம் ஏற்படுகின்ற மாற்றத்தை விட வரவேற்கப்பட வேண்டியதாகும். இந்த அடிப்படையில் இந்தக் கட்டுரை பெண்களைப் பார்த்துப் பேசுகின்றது. நான் செல்லப் ...
Read More »விளக்கை நோக்கி வரும் ‘விட்டில் பூச்சிகள்’ போல
எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன. ‘இதனைப் போன்று (பாவங்களைப் புரிந்து) நரக நெருப்பில் நீங்கள் விழாமல் தடுக்க உங்கள் இடுப்புக்களைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டிருக்கிறேன். நரகைவிட்டும் வாருங்ககள்! நரகைவிட்டும் வாருங்கள்! எனக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னையும் ...
Read More »அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்
சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும். ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் ...
Read More »பெண்ணே பெண்ணே! பொறாமை வேண்டாம்! கண்ணே!
பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர். பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் ...
Read More »மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த சில தாழ்த்தப்பட்ட மக்களை பசுவின் மீது கொண்ட பக்தியால் இவர்கள் அடித்தே கொலை ...
Read More »இஸ்லாத்தில் ஜீவகாருண்யம்
இஸ்லாம் சகல உயிர்கள் மீதும் காருண்யத்தைக் காட்டுமாறு கூறும் சன்மார்க்கமாகும். இருப்பினும் மனித இனத்தின் தேவை கருதி, படைப்பினப் பெருக்கத்தின் சமநிலை கருதி சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. இதை ஒரு குறையாகவோ, குற்றமாகவோ இஸ்லாம் காணவில்லை. குர்பான், அகீகா, உழ்ஹிய்யா போன்ற சந்தர்ப்பங்களில் உயிர்ப் பிராணிகளை அறுத்துப் பிரருக்கு உண்பதற்காக அளிப்பதை வணக்கமாகக் கூட இஸ்லாம் கருதுகின்றது. இதை வைத்து இஸ்லாத்தில் ஜீவகாருன்யம் இல்லை. அது கொடிய இதயத்தை மனிதனிடம் வளர்க்கின்றது என்று இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதோரும், இஸ்லாத்தின் ...
Read More »இஸ்லாமிய இல்லம்!
வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும். வீடு அமைதியின் அடித்தளம்: “உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)” (16:80) இந்த வசனம் ...
Read More »ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்
இஸ்லாம் கூறும் அடிப்படை வணக்கங்களில் நோன்பு பிரதானமான தொன்றாகும். மனித ஆன்ம பரிசுத்தத்திற்கு வழி வகுக்கும் இவ்வணக்கத்தை மேற்கொள்ளும் ஒருவரின் உள்ளத்தில் எழக்கூடிய ஐயங்கள் எவை என யூகித்து அவற்றைத் தெளிவுபடுத்துமுகமாக இவ்வாக்கம் எழுதப்படுகின்றது. சந்தேகம்:- அனைத்து இபாதத்துக்களும் “நிய்யத்” அவசியமானது. நோன்பிற்கும் “நிய்யத்” அவசியமானதே. நோன்பின் நிய்யத் எனக் கூறப்படும் வாசகங்கள் ஆதாரபூர்வமானவைதாமா? தெளிவு:- “நிய்யத்” என்றால் “எண்ணங்கொள்ளல்” என்பதே அர்த்தமாகும். “நிய்யத்தை” வாயால் மொழிதல் கூடாது. எந்த இறை வணக்கத்தைச் செய்தாலும், அல்லாஹ்வுக்காக செய்கின்றேன் என்ற இஹ்லாஸான எண்ணத்துடன் செய்வதையே இஸ்லாம் ...
Read More »