ரமழான் தக்வாவின் மாதமாகும். அது அல்குர்ஆனின் மாதமாகும், ஸதகாவின் மாதமாகும், பொறுமையின் மாதமாகும் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். அருள் வளம் பொருந்திய இம்மாதத்தில் நாம் நோன்பு நோற்கின்றோம் கியாமுல் லைல் தொழுகின்றோம். ஸகாதுல் பித்ர் கொடுக்கின்றோம் இவ்வாறு பல்வேறுபட்ட நல்லறங்களில் ஈடுபடுகின்றோம். இத்தகைய நல்லறங்களில் ஈடுபடுகின்ற போது பல்வேறு பட்ட சந்தேகங்களும் கேள்விகளும் பொதுவாக எழுகின்றன. அவற்றுள் சிலவற்றுக்கான விளக்கங்களை இவ்வாக் கத்தின் மூலம் தர முயல்கின்றோம். பிறையில் பிரியும் சமூகம்: பிறையைக் கண்டு நோன்பு ...
Read More »பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப தால்தான் பல்வேறுபட்ட குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த வகையில் நோன்பைக் குற்றப் பரிகாரமாகப் பரிந்துரைக்கும் சில குர்ஆனின் சட்டங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என நினைக்கின்றேன். ‘அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவு செய்யுங்கள். (அதனை நிறைவு செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டால் பலிப்பிராணியில் சாத்திய மானதுதான் (அதற்குப்) ...
Read More »பிக்ஹுல் இஸ்லாம் – குனூத்
குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர். சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். சிலர் பின்பற்றித் தொழுதாலும் இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜதாக்கள் மறதிக்காக தனியாகச் செய்துவிட்டு ஸலாம் கொடுக்கின்றனர். சுபஹுடைய குனூத் ...
Read More »படிப்படியாகத் தடை செய்யப்பட்ட மது
‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (2:219) அறபு மக்கள் மிகப்பெரும் மதுப் பிரியர்களாக இருந்தார்கள். குடிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகன்று என்று நினைத்தவர்களும் இருந்தனர். ஒரு ஆண், ...
Read More »