மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது. மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். “பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் மீது ஈர்ப்பு இருந்தது. அதேவேளை அவர்கள் மாட்டையும் நேசித்தனர். மூஸா நபி சமூகத்தில் ...
Read More »அனுபவப் பகிர்வு: அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்)
சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் “அஹ்லே ஹிந்த்” (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி “நீங்கள் கொழும்பா?” என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார். அப்துல் ஹமீத் பக்ரியின் மாணவரின் மாணவன் நான் என என்னை அறிமுகம் செய்து ...
Read More »பெப்ரவரி 14 – காதலர் தினம் | ஆசிரியர் பக்கம் | கட்டுரை
சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. ‘பெற்றோர் தினம்’, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் பெற்றோரை மதித்தல், ஆசிரியரை கண்ணிப்படுத்துதல், போதை ஒழிப்பு போன்ற அம்சங்கள் இஸ்லாத்தில் உள்ள ...
Read More »கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-13]
யூதர்கள் தவ்ராத் வேதத்தைப் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் சனிக்கிழமையில் தொழில்செய்யக்கூடாது . கடற்கரையில் யூதர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழில் சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். சனிக்கிழமை தினத்தில் பெரும் திரளான மீன்கள் நீரின்மேல் வந்து தலைகாட்டும். இதனால் சிலர் பொருளாதார மோகம் கொண்டனர். ஆண்டவன் கட்டளையை தந்திரம் மூலம் மீற முற்பட்டனர். வெள்ளி இரவு வலை போட்டு, ஞாயிறு காலை வலை இழுத்து மீன் பிடித்தனர். மேலும், வாய்க்கால் வெட்டி சனிக்கிழமை ...
Read More »ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்நிகழ்வையொட்டி சூறா அந்நூரின் 10 வசனங்கள் அருளப்பட்டன. அந்நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே அல்லாஹ்வும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆயிஷா(ரலி) அறிவித்தார், ‘இறைத்தூதர்(ச) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு ...
Read More »பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் | ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]
பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம். ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது. பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும். ஆயிஷா(ரலி) உம்மு ஸலமா(ரலி) போன்ற பெண்கள் இமாமத் செய்ததாக வரக் கூடிய செய்திகளும் இக்கருத்துக்கு வலுசேர்க்கின்றது. “உம்மு ஸலமா(ரலி) ...
Read More »உலமாக்களும்… அவர்களின் பொறுப்புக்களும்..
இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று! கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான். “நம்பிக்கை கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். நீங்கள், ‘எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துவான். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” -58:11 இந்த வசனத்தில் கல்வி, ...
Read More »யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 14]
“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே யிருந்ததினாலுமாகும்.” (3:112) யூதர்கள் மீது இழிவும் வறுமையும் சாட்டப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று இந்த ...
Read More »இஸ்லாத்தில் மனித நேயம் காத்தல் | Video | Paragahadeniya
அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (13) ”ISLATHIL MANIDA NEYAM KAATTAL” AL QURAN TAFHSEER CLASS (13) (SURHA AN NISA EXPLANATION) ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 10/01/2018.
Read More »இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]
இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு கத்தினான். தனது சித்தப்பாவை அந்த சடலம் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கொலை ...
Read More »