பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர் | கட்டுரை.

இயேசு அறிவித்த தேற்றவாளர்

‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார், அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார் அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்களைக் கண்டித்து வழிநடாத்துவார்’ என முஹம்மத் நபி பற்றி இயேசு முழுமையான முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார். அவர் முஹம்மத் நபி குறித்துளூ பரிசுத்த ஆவியானவர், சத்திய ஆவியானவர், தேற்றவாளர், உலகத்தின் அதிபதி… என்றெல்லாம் வர்ணித்து விபரித்துள்ளார்.

இது குறித்து புதிய ஏற்பாடு யோவான், சுவிசேசம், விரிவாகப் பேசியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள வர்ணனைகள் முஹம்மது நபிக்குரியவை என்பதை விபரிப்பதுடன் கிறிஸ்தவ அறிஞர்கள் அவற்றுக்குக் கூறும் தவறான விளக்கங்களின் போலித் தன்மையையும் இவ்விதழில் விரிவாக நோக்கவுள்ளோம். இன்ஷா அல்லாஹ்.

அஹ்மத் எனும் தூதர் வருவார்:

‘இஸ்ராஈலின் சந்ததியினரே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்துபவராகவும், எனக்குப் பின் வரும் ‘அஹ்மத்’ என்ற பெயரையுடைய ஒரு தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவராகவும் உங்களிடம் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன்’ என மர்யமின் மகன் ஈஸா கூறியதை (நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக!) அவர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது, ‘இது தெளிவான சூனியமே’ என அவர்கள் கூறினர்.’ (61:6)

நபி(ச) அவர்கள் முஹம்மத் என்றும் அஹ்மத் என்றும் அழைக்கப்படுவார்கள். அல்ஹம்து என்றால் புகழ் என்பது அர்த்தமாகும். முஹம்மத் என்றால் புகழுக்குரியவர், போற்றுதலுக்குரியவர் என்பது அர்த்தமாகும். அஹ்மத் என்றால் மிகவும் புகழுக்குரியவர், மிகவும் போற்றுதலுக்குரியவர் என்பது அர்த்தமாகும். இயேசு முஹம்மது நபியின் பெயர் கூறி அவர் குறித்து முன்னறிவிப்புச் செய்ததாக இங்கே கூறப்படுகின்றது. இயேசுவின் சீடர்களில் ஒருவரான ‘பர்னபா’ என்பவரால் எழுதப்பட்ட சுவிசேசத்தில் முஹம்மது நபியின் பெயர் இடம்பெற்றுள்ளது. முஹம்மது நபியின் வருகைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயேசுவின் சீடரால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டில் முஹம்மது நபியின் பெயர் இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் கற்பனையாக எழுதப்பட்டதாக இருக்க முடியாது. அவர் இயேசுவிடம் கேட்டு அறிந்தே எழுதியிருக்க வேண்டும்.

பர்னபா இயேசுவின் முக்கியமான சீடர்களில் ஒருவராவார். (பார்க்க: 11:22, 25, 30, 12:25, 13:1, 2, 7,43, 46, 50, 14:14, 20, 15:12,22, 25, 35, 37)
இன்றைய கிறிஸ்தவ மதத்தின் மூலகர்த்தாவாகத் திகழும் பவுலுக்கு நிகரானவராக பர்னபா இருந்துள்ளார். பவுல் இயேசு இருக்கும் வரைக்கும் அவரை எதிர்த்துக் கொண்டிருந்தவர் இயேசுவின் மறைவின் பின்னர் கிறிஸ்தவத்துக்கு மாறியவர். ஆனால், பர்னபா இயேசுவுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தக்க அவரது மாணவர் (அப்போஸ்தலர் 15: 25) இந்த இருவருக்கு மிடையில் இருந்த நெருக்கம் உடைகின்றது. பகை உருவாகின்றது.

‘இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபம் மூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.’
(அப்போஸ்தலர் 15:39)

இந்த பர்னபா வஞ்சிக்கப்பட்டுள்ளார் என்பதை பைபிளின் நிருபங்களைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது. (உதாரணம், பார்க்க: 1 கொரிந்தியர்: 1-9) பவுல் – பர்னபாவுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் பர்னபாவும் அவருடன் இருந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பர்னபா எழுதிய சுவிசேசத்தில் இயேசு கடவுளோ கடவுளின் குமாரரோ அல்லர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இயேசுவின் சிலுவை மரணமும் மறுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ உலகு இயேசுவின் சீடரால் எழுதப்பட்ட சுவிசேசத்தை புறக்கணித்துவிட்டு இயேசுவின் எதிரியாக இருந்து இயேசுவின் மறைவின் பின்னர் மனம் மாறியதாகக் கூறப்படும் பவுலின் சிந்தனைக்குத்தான் முன்னுரிமை கொடுத்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

மொழிபெயர்ப்புக் கோளாறு:
இயேசு ஒரு தேற்றவாளனின், உலக அதிபதியின் வருகை குறித்து முன்னறிவிப்புச் செய்துள்ளார். ஆனால், அவரைப் பற்றி பைபிள் பரிசுத்த ஆவி, சத்திய ஆவியாகியவர் என்றெல்லாம் கூறுகின்றது.

பைபிள் பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இயேசு பேசிய மூல மொழியில் பைபிள் இல்லை என்பது அதன் அடிப்படையான குறைபாடாகும். பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பைபிளை மொழி பெயர்க்கும் போது பெயர்களைக் கூட மாற்றும் இயல்புள்ளவர்களாகவும் மொழிமாற்றம் செய்யும் பழக்கமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர். உதாரணமாக, இயேசு என்பதை ‘ஜீஸஸ்’ என்றும் தாவீது என்பதை ‘டேவிட்’ என்றும் பேதுரு என்பதை ‘பீட்டர்’ என்றும் மாற்றுவதைக் குறிப்பிடலாம்.

இயேசு தனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெருடைய ஒரு தூதர் வருவார் என முன்னறிவித்துள்ளார். இயேசு பேசிய மூல மொழியில் பைபிள் எழுதப்படவில்லை. மொழிமாற்றம் செய்யும் போது இந்தப் பெயரும் மருவியிருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

இந்த முன்னோட்டத்துடன் இயேசு தேற்றவாளர், பரிசுத்த ஆவி, சத்திய ஆவியானவர் என்றெல்லாம் கூறியதாகக் கூறப்படும் இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகம் PARAKLETOS எனும் பதமாகும். இதுதான் தேற்றவாளன், பரிசுத்த ஆவி, சத்திய ஆவியானவர் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வார்த்தை PERIKLYTOS எனும் வார்த்தையின் திரிபாகும். இயேசுவின் மொழியில் இதன் அர்த்தம் புகழுக்குரியவர், போற்றுதலுக்குரியவர் அல்லது அதிகம் புகழ்பவர் என்று அர்த்தப்படும். அஹ்மத் – மிகப் புகழுக்குரியவர் எனும் பெயரில் ஒரு தூதர் வருவார் என்பதுதான் மொழிமாற்றம் செய்யும் போது மாறி மருவியுள்ளது. இது குறித்து இஸ்லாமிய அறிஞர்களான இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) இமாம் இப்னுல் கையூம் உட்பட பலரும் பேசியுள்ளார்கள்.

எனக்கும் முழுமையாகத் தெரியாத வாசகர்களாலும் அதிகம் உள்வாங்கிக் கொள்ள முடியாத இந்த ஆழமான மொழி ஆய்வுக்குள் வாசகர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல நான் விரும்பவில்லை. எனவே, தமிழ் மொழி பெயர்ப்பில் உள்ள செய்திகளை வைத்தே எனது வாதங்களையும் ஆதாரங்களையும் அடுக்கிச் செல்லலாம் என நான் எண்ணுகின்றேன்.

சத்திய ஆவி, பரிசுத்த ஆவி என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இயேசு ஆவியைத்தான் முன்னறிவிப்பதாக கிறிஸ்தவ அறிஞர்கள் பின்வரும் இயேசுவின் வார்த்தைகளை வர்ணிக்கின்றனர். இயேசுவின் மறைவின் பின்னர் இயேசுவின் சீடர்களிடம் பரிசுத்த ஆவி வந்ததாகவும், அதை குறித்த முன்னறிவிப்பாகவும் அவர்கள் இதைப் புரிந்து கொள்கின்றனர். அவர்களின் இந்த விளக்கங்களை மனதில் வைத்துக் கொண்டு பின்வரும் இயேசுவின் வார்த்தைகளைப் படியுங்கள்.

முக்கிய போதனை:
தனக்குப் பின் வரப் போகும் இறைத்தூதரை ஏற்க வேண்டும் என்று போதிப்பதற்கு முன்னர் இயேசு முன்னோட்ட மாக இப்படிக் கூறுகின்றார்.

‘நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.’
(யோவான் 14:15)

நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள் என பீடிகை போடுகின்றார். இதன் மூலம் தான் சொல்லப் போவது முக்கியமான ஒரு விடயம் என்பதை உணர்த்துகின்றார்கள். ஏன் இந்தப் பீடிகை தவ்றாத் வேதத்தில் இயேசுவின் வருகை பற்றி முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தும் இந்த மக்கள் இயேசுவை ஏற்கவில்லை. முன்னறிவிக்கப்பட்ட இறைத் தூதர்கள் மறுக்கப்படுவதை அனுபவபூர்வமாக அறிந்த இயேசு நீங்கள் உண்மையில் என்மீது அன்பு கொண்டவர்களாக இருந்தால் எனக்குப் பின்னர் வரப்போகும் இறைத்தூதரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கின்றார்கள். முஹம்மது நபியை ஏற்காத எவரும் இயேசு மீது உண்மையான அன்பு உள்ளவராக ஆக முடியாது.

இது இறைவன் வாக்கு:
எனக்குப் பின்னர் ஒரு இறைத்தூதர் வருவார் என்பது எனது வார்த்தை அல்ல. அது இறைவன் வார்த்தை என்னிடம் அன்பாக இல்லாதவன் அவரை ஏற்க மாட்டான் என்றும் இயேசு கூறுகின்றார்.

‘என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடைய தாயிருக்கிறது.’ (யோவான் 14:24)

விசுவாசிப்பதற்காக முன்னரே சொல்கின்றேன்:
பின்னால் நடக்கப் போகின்ற காரியத்தை இப்போதே உங்களுக்குச் சொல்கின்றேன். அது நடக்கும் போது நீங்கள் விசுவாசிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காகவே இப்போதே இதைக் கூறுகின்றேன் என்றும் இயேசு உரைக்கின்றார்.

‘இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.’
(யோவான் 14:29)

அப்போஸ்தலர் மீது பரிசுத்த ஆவி இறங்குவதைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. அப்போஸ்தலர் மீது ஆவி இறங்கினால் அவர்களே அதை விசுவாசிக்காமல் இருப்பார்களா?

வேறொரு தேற்றவாளன் வருவார்:
‘உலகம் அந்தச் சத்திய ஆவியான வரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிற படியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாதுளூ அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.’ (யோவான் 14:17)

இந்த இயேசுவின் வார்த்தைகள் உன்னிப்பாக அவதானிக்கத்தக்கதாகும்.

01.
வேறொரு தேற்றவாளனைக் கடவுள் அனுப்புவார் என்று இயேசு கூறுகின்றார். வேறொரு தேற்றவாளன் என்றால் இப்போது ஒரு தேற்றவாளன் இருக்கின்றார். அவர் இயேசு, அவர் போனதன் பின்னர் அவரைப் போன்ற அவரை விட வலிமை பெற்ற வேறொரு தேற்றவாளன் வருவார் என இயேசு கூறுகின்றார். வேறொரு தேற்றவாளர் என்ற வார்த்தை மூலம் தன்னைப் போன்ற ஒரு இறைத்தூதரின் வருகை பற்றித்தான் இயேசு பேசுகின்றாரே அல்லாமல் பரிசுத்த ஆவி பற்றி பேசவில்லை என்பது உறுதியாகின்றது.

சத்திய ஆவி என்பது வெறும் ஆவியை மட்டும் குறிப்பதாக கிறிஸ்தவ உலகம் நம்பலாம். ஆனால், பைபிளின் பார்வையில் சத்தியத்தைப் போதிக்கும் தூதர்களும் இப்படி அழைக்கப்படலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

முதலாம் யோவான் நான்காம் அதிகாரம் 1-3 வரையுள்ள வசனங்கள் உண்மையான தீர்க்கதரிசிகள் பற்றியும் கள்ளத் தீர்க்கதரிசிகள் பற்றியும் பேசுகின்றன. அவர்கள் பற்றிக் கூறும் போது எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள் என்றும் தேவ ஆவியை எப்படி அறிவது என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கே ஆவி, தேவ ஆவி என்ற பதங்கள் மனிதருக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியலாம்.

எனவே, பரிசுத்த ஆவி, சத்திய ஆவி என்பன மனிதத் தூதர்களைக் குறிக்காது என்பது தப்பான வாதமாகும்.

என்றைக்கும் உங்களுடன் இருப்பார்:
இதன் மூலம் பின்னால் வரும் இறைத் தூதர் இறுதித் தூதராக இருப்பார் என்பதையும் அவரது போதனைகள் மாற்றப்பட மாட்டாது என்பதையும் அவரது போதனை உலகம் உள்ள காலம் வரை நிலைத்து நிற்கும் என்பதையும் அது உலகம் உள்ளளவும் உள்ள மக்களுக்குரியதாக இருக்கும் என்பதையும் உணர்;த்துகின்றார்கள்.

‘முஹம்மத், உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார் களின் முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.’ (33:40)

முஹம்மத் நபி(ச) அவர்கள் இறுதித் தூதர் எனக் குர்ஆன் கூறுகின்றது. எனவே, அவர் கொண்டு வந்த போதனைகள் இறுதிவரைக்கும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். இயேசு மேலே கூறிய வர்ணனைக்கு முஹம்மத் நபி(ச) அவர்கள் மட்டுமே உரித்துடையவர்களாவார்.

சீடர்கள் இருக்கும் போதே வர வேண்டுமா?:
இயேசு சீடர்களிடம்தான் அந்தத் தேற்றவாளன் வருகை பற்றிக் கூறினார். எனவே, அவர்கள் இருக்கும் போதே அந்தத் தேற்றவாளர் வர வேண்டும். அவர்கள் மரணித்து நூற்றாண்டுகள் கழிந்த பின் வருபவர் எப்படி இயேசுவால் முன்னறிவிக்கப் பட்டவராக இருக்க முடியும் என கிறிஸ்தவ அறிஞர்கள் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.

‘அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்ளூ அன்றியும் மனுஷகுமாரன், சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லு கிறேன் என்றார்.’ (மத்தேயு 26:64)

இயேசு இப்படிக் கூறி 2000 வருடங்கள் ஆகிவிட்டன. அதை யாரும் காணவில்லை. இது முதல் நீங்கள் காண்பீர்கள் என்று யாரைப் பார்த்துக் கூறினார்களோ அவர்கள் மட்டுமன்றி அவர்களது பத்துத் தலைமுறையும் அழிந்து விட்டது. உலக அழிவு நெருங்கும் போது இயேசு வானத்திலிருந்து இறங்குவதை அன்று உயிருடன் இருப்பவர்கள் காண்பார்கள் என்று இதை எடுத்துக் கொள்வது போன்றே அப்போஸ்தர்களைப் பார்த்து இயேசு பேசினாலும் அவர்கள் உயிருடன் இருக்கும் போது குறித்த தூதர் வர வேண்டும் என்பதற்கில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் அறியாது நீங்கள் அறிவீர்கள்:
உலகம் அவரைக் காணாமலும் அறியாமலும் இருப்பதால் அவரைப் பெற்றுக் கொள்ளாது அவர் உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள் என்று கூறப்படுகின்றது.

இயேசு முஹம்மத் நபி(ச) அவர்கள் பற்றி முழுமையான முன்னறிவிப்புக்களைச் சொல்லியுள்ளதால் அவர் வரும் போது இயேசுவின் உண்மையான போதனையைப் படித்தவர்கள் அவரை அறிந்து கொள்வார்கள் என்று இங்கே கூறப்படுகின்றது.

‘நாம் யாருக்கு வேதத்தை வழங்கி னோமோ, அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவது போன்று (நபியாகிய) அவரை அறிவார்கள். நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் அறிந்து கொண்டே சத்தியத்தை மறைக்கின்றனர்.’ (2:146)
தனது பிள்ளையை அறிவது போல் வேதத்தைக் கற்றவர்கள் முஹம்மது நபியை அறிவார்கள். இருப்பினும் சிலர் வேண்டுமென்றே சத்தியத்தை மறைப்பதாகக் குர்ஆன் குற்றம் சாட்டுகின்றது. இயேசு அவரை நீங்கள் அறிவீர்கள் என்று கூறுகின்றார்.

முஹம்மத் சீடர்களுக்கு முன் வாசம் பண்ணினாரா?:
உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள் இருப்பதால் என இங்கே கூறுகிறார். முஹம்மத் இயேசுவின் சீடர்களுக்குள் வாசம் பண்ணினாரா? என கிறிஸ்தவ அறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இயேசு உவமையாகப் பேசும் இயல்புள்ளவர். உங்களுக்குள் வாம் பண்ணுகின்றார் என்றால் அவரைப் பற்றிய தகவல் உங்களிடத்தில் இருக்கின்றது என்பதைத்தான் அது உணர்து கின்றது. அத்துடன் 1816, 1860 களில் வெளிவந்த அரபு பைபிள்களில், ‘வயகூனு பீய்க்கும், வஸயகூனு பீய்க்கும்’ எதிர்காலத்தில் உங்களிடத்தில் இருப்பார் என்ற பதமே இடம் பெற்றுள்ளது.

குறித்த இறைத்தூதர் எதிர் காலத்தில்தான் வருவார் என இயேசு வெளிப்படையாகக் கூறியிருக்கும் போது உங்களில் வாசம் பண்ணுகின்றார் என்ற மறைமுகமான வார்த்தையை வைத்து அவர் இயேசுவின் சீடர்கள் உயிருடன் இருக்கும் போது வர வேண்டும் என வாதிப்பது நியாயமற்றதாகும்.

தேற்றவாளர் பிற்காலத்தில் வருவார் என்பதை இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் தெளிவாகவே உணர்த்துகின்றன.

இது நடக்கும் போது நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக முன்னரே கூறுகின்றேன்.
இனி நான் அதிகம் பேச மாட்டேன். உலகத்தின் அதிபதி வருகின்றார்.
நான் போகாவிட்டால் அவர் வரமாட்டார்.
நிறைய விடயங்கள் சொல்ல வேண்டி யுள்ளது. நீங்கள் இப்போது அதைத் தாங்க மாட்டீர்கள். அவர் வந்து சொல்வார்.
இப்படியான பல வார்த்தைகள் அவர் எதிர்காலத்தில் வருவார் என்பதைத்தான் உணர்த்துகின்றன. உங்களுக்குள் இப்போதும் இருக்கின்றார் என்பதை உணர்த்தவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எல்லாவற்றையும் போதிப்பார்;:
‘என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.’
(யோவான் 14:26)

இறுதித் தூதர் இயேசு போதித்த வற்iயும் நினைவூட்டுவார். அத்துடன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார் என்று கூறப்படுகின்றது. இயேசுவின் மறைவிற்குப் பின்னர் இயேசு பற்றி அதிக மக்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாக இருந்தவர் முஹம்மது நபிதான். இயேசு பற்றியும் அவரது அற்புதப் படைப்பு, உலகின் தாயார் இயேசுவின் ஏகத்துவப் போதனை பற்றியெல்லாம் முஹம்மது நபி நினைவூட்டியுள்ளார்.

அத்துடன், முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அவர் மக்களுக்கு வழங்கியுள்ளார். இயேசு உயர்த்தப்பட்ட பின்னர் குறுகிய காலத்துக்குள்ளேயே அப்போஸ்தலர் களுக்கு மத்தியில் முரண்பாடுகள் வெடித்ததாகவும் விக்கிர ஆராதனை, விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டவற்றை உண்ணல் போன்ற பல விடயங்களில் அவர்களுக்குள் சர்ச்சைகள் எழுந்ததாகவும் பைபிள் கூறுகின்றது.

இயேசுவின் போதனைகளை அவர்கள் முழுமையாக நினைவூட்டவில்லை. விருத்த சேதனம் செய்தல் போன்ற விடயங்களில் முரண்பட்டு இயேசுவின் போதனைகள் புறக்கணிக்கப்பட்டன.

உலகத்தின் அதிபதி வருகின்றார்:
‘இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.’
(யோவான் 14:30)

இயேசு முஹம்மது நபி(ச) அவர்களை உலகின் அதிபதி என்று கூறுகின்றார். இறைத்தூதர்கள்தான் மக்களை வழிநடாத்தும் அதிபதிகளாவார்கள். முஹம்மது நபியவர்கள் அந்த இறைத்தூதர்களுக்குத் தலைவராவார் கள். இந்த அடிப்படையில் அவர் உலகத்தின் அதிபதியாவார்.

‘மறுமை நாளில் மனிதர்களின் தலைவராக நான் இருப்பேன் என நபி(ச) அவர்கள் நவின்றார்கள்.’
அபூ ஹுரைரா(வ)
நூல்: புகாரி 4712, 3340)

உலகத்தின் அதிபதி என்ற இயேசுவின் வார்த்தைக்கு முஹம்மத் (ச) அவர்கள்தான் உரிமை கூறியுள்ளார்கள். ‘மறுமை நாளில் மனித இனத்தின் அதிபதியாக நானே இருப்பேன். இதில் எந்தப் பெருமையும் இல்லை. என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத்(வ)
நூல்: அஹ்மத் 10987

என்னைக் குறித்து சாட்சி கூறுவார்:
வருகின்ற இறைத்தூதர் என்னைக் குறித்து சாட்சி கூறுவார் என இயேசு கூறுகின்றார்.

‘பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றவாளன் வரும் போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சிகொடுப்பார்.’

‘நீங்களும் ஆதிமுதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளா யிருப்பீர்கள்.’ (யோவான் 15:26-27)

எதிர்காலத்தில் வரும் தேற்றவாளர் தன்னைக் குறித்து சாட்சி கூறுவார் என இயேசு கூறுகின்றார். இயேசு குறித்து முஹம்மத்(ச) அவர்கள் கூறிய சாட்சியத்தால் கோடான கோடி முஸ்லிம்கள் இயேசுவை நம்பியுள்ளனர்.

இயேசு குறித்து முஹம்மது நபி சொன்ன சாட்சியங்களில் சில பின் வருமாறு.

அவர் ஓர் இறைத்தூதர்.
அற்புதமாகத் தந்தை இல்லாமல் பிறந்தார்.
பல அற்புதங்கள் செய்தவர்.
இன்ஜீல் எனும் வேதம் வழங்கப்பட்டவர்.
இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவர்.
யூதர்களின் சதியில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்.
அவரது தாய் ஒழுக்கமிக்கவர்.
சுவனத்துக்குரியவர்.
இயேசு இறைவனோ இறை குமாரனோ அல்லர்.
இயேசு சிலுவையில் இழிவான மரணத்தை அடைந்தவரல்லர்.
இயேசு உயிருடன் வானுக்கு உயர்த்தப்பட்டார்.
இன்றுவரை உயிருடன் இருக்கிறார்.
மீண்டும் இந்த பூமிக்கு வருவார். அற்புதமான நீதி நெறிமிக்க ஆட்சியை வழங்குவார்.
இப்படி இயேசு குறித்து முஹம்மத் நபி சாட்சி கூறியுள்ளார். அதனால், கோடான கோடி மக்கள் இவற்றை நம்பி ஏற்றுள்ளனர்.

இந்த இரண்டு வசனங்களும் இரண்டு சாட்சியங்கள் பற்றிப் பேசுகின்றன. ஒன்று, எதிர் காலத்தில் வரும் தேற்றவாளர் இயேசு பற்றிச் சொல்லும் சாட்சியம். அடுத்து இயேசுவுடன் கூட இருந்த அவரது சீடர்களின் சாட்சியம். பரிசுத்த ஆவிளூ சத்திய ஆவியான தேற்றவாளரின் சாட்சியம் தனியாகவும் சீடர்களின் சாட்சியம் தனியாகவும் இங்கே கூறப்பட்டுள்ளது.

பரிசுத்த ஆவி, சீடர்கள் மேல் வந்து அவர்கள் இயேசு குறித்துச் சொல்லும் சாட்சியம் பற்றித்தான் இந்த வசனங்கள் பேசுகின்றன என கிறிஸ்தவ உலகம் உலக மக்களை ஏமாற்ற முற்படுவது இயேசுவுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும். முஹம்மத் நபியைத் தவிர இயேசு பற்றி இவ்வளவு சாட்சியங்கள் சொல்லி கோடான கோடி மக்களை நம்ப வைத்த வேறு ஒருவரை உலக வரலாறு கண்டதில்லைளூ காணப் போவதுமில்லை. இயேசு முன்னறிவித்த அந்த தேற்றவாளரை கிறிஸ்தவ உலகு ஏற்க மறுப்பது இயேசுவையே மறுப்பதாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நான் போகாவிட்டால் அவர் வரமாட்டார்:
‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்ளூ நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்ளூ நான் போகா திருந்தால், தேற்றவாளன் உங்களிடத்தில் வரார்ளூ நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.’

‘அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.’
(யோவான் 16:7-8)

நான் போகாவிட்டால் அவர் வரமாட்டார் என்று கூறப்படுகின்றது. இயேசு தேற்றவாளர் என பரிசுத்த ஆவி குறித்துத்தான் பேசினார் என கிறிஸ்தவ அறிஞர்கள் கூறுவது பொய்யானது என்பதை இது உணர்த்துகின்றது. இயேசு தனக்குப் பின்னர் வரப்போகின்ற ஒருவர் பற்றித்தான் பேசுகின்றார். பரிசுத்த ஆவி இயேசு இருக்கும் போதே வந்துள்ளது. எனவே, இங்கு மனிதராகவும் இறைவனின் தூதராகவும் இருக்கும் ஒருவர் பற்றித்தான் பேசப்படுகின்றது என்பது உறுதியாகும்.

அடுத்து, ஒரே நேரத்தில் பல இறைத்தூதர்கள் இருக்க வாய்ப்புண்டு. ஆனால், ஒரே நேரத்தில் இரு வேறு விதமாக சட்டதிட்டங்களை உடைய இறைத்தூதர்கள் இருக்க முடியாது. இறைவனிடம் இருந்து வந்த ஒரு இறைத்தூதர் திருடியவரின் கையை வெட்ட வேண்டும் என்றும் மற்றவர் வெட்ட வேண்டியதில்லை என்றும் போதிக்க முடியாது.

எனவே, ஒரே நேரத்தில் இரு வேறுவிதமாக சட்டதிட்டங்களையுடைய இரண்டு இறைத்தூதர்கள் இருக்க முடியாது. எனவேதான் நான் இருக்கும் போது அவர் வரமாட்டார் என இயேசு கூறுகின்றார்.

உலகைக் கண்டித்து உணர்த்துவார்:
வரும் அந்தத் தூதர் பாவம், நீதி நியாயத் தீர்ப்பு நாள் குறித்து உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் என்று இயேசு கூறுகின்றார். இயேசுவின் மறைவின் பின்னர் உலக மக்களுக்கு பாவத்தைக் குறித்தும், நீதி குறித்தும், மறுமை நாள் குறித்தும் முஹம்மது நபியை விட அதிகம் போதித்த ஒருவரை கிறிஸ்தவ உலகு காட்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.