Uncategorized

July, 2021

  • 16 July

    மூஸா நபியும் இரு பெண்களும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-30]

    பிர்அவ்னிடமிருந்து தப்புவதற்காக மூஸாநபி ஊரை விட்டு ஓடினார். இறுதியில் அவர் ‘மதியன்’ பிரதேசத்தை அடைந்தார். அந்த இடத்தில் இடையர்கள் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் தமது ஆடுகளை வைத்துக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர். பெண்கள் இருவர் இருக்க இந்த இளைஞர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருப்பது மூஸா நபிக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவர்கள் அந்த இரு பெண்களிடமும் “என்ன செய்தி?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள் “இவர்கள் நீர் புகட்டும் வரையில் நீர் புகட்ட முடியாது! ...

  • 16 July

    பிர்அவ்னின் குடும்பத்தில் முஃமின்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-29]

    இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களின் குடும்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்பவர்களை ஏற்படுத்தி விடுவது அல்லாஹ் ஆற்றலைக் காட்டும் நிகழ்வாகும். பிர்அவ்ன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியாவான். அவனது மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதேபோன்று பிர்அவ்னின் அரசபையில் இருந்த பிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் முஸ்லிமாக இருந்தார். ஆனால் அவர் மூஸா நபியை ஏற்றிருந்ததை இரகசியமாக வைத்திருந்தார். மூஸா நபி பிர்அவ்னின் அரசவைக்கு வந்து அவனிடம் சத்தியத்தை எடுத்துச் சொன்னார். இஸ்ரவேல் சமூகத்தை அநியாயம் செய்யாதே என்றெல்லாம் கூறினார். பிர்அவ்ன் மூஸா ...

  • 16 July

    இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

    இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைவியருடன் வாழ்க்கை நடாத்தலாம் என அங்கீகரிக்கின்றது. இதன் மூலம் நான்குக்கு மேற்பட்ட பெண்களுக்கு ...

  • 16 July

    உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன்- 3 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-22]

    துல்கர்னைன் ஈமானிய உறுதியுடனும் மக்களின் எழுச்சியுடனும் அநியாயக்கார அரசனை எதிர்கொண்டார். இதன் மூலம் தனது நாட்டை அநியாயம் நிறைந்த ஆட்சியின் பிடியில் இருந்து விடுவித்தார். ஆனால் அண்டை நாடுகளில் அநியாயமும் அக்கிரமமும் தலைவிரித்துத் தாண்டவமாடும் போது நீதியையும் நியாயத்தையும் நேசிக்கும் இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே துல்கர்னைன் அல்லாஹ்வின் உதவியுடன் தனது நாட்டை விடுவித்ததுடன் எதிரி அரசனையும் தோற்கடித்து அந்த எல்லைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். துல்கர்னைன் வெறுமனே தனது நாட்டின் விடுதலையை மட்டுமே நாடியிருந்தால் அவர் இத்துடன் தன் பணிகளை நிறுத்தியிருப்பார். ...

  • 16 July

    உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-21]

    துல்கர்னைன் இளமைப் பருவத்தை அடைந்த போது தனது சமூகத்தின் அடிமைத்தனத்தையும் பலவீனத்தையும் கண்டு கலங்கினார். இந்த அடிமைத்துவ ஆஸ்திகளையெல்லாம் அறுத்தெறிந்து தன் சமூகத்தைச் சுதந்திரமடையச் செய்ய வேண்டும் என்று அவர் மனம் ஆயிரம் விடுத்தம் அடித்துச் சொன்னது. சிறிது காலத்திலேயே துல்கர்னைன் பிரபல்யம் பெற்றார். அவரது கருத்துக்கள் வெகுவேகமாகப் பரவின. மக்கள் அவரால் கவரப்பட்டனர். மக்கள் அவரால் கவரப்பட்டனர். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவருக்குக் கட்டுப்பட்டனர். அவரது தலைமையை ஏற்றனர். இழந்த உரிமைகளை மீளப் பெற்று, பூரண சுதந்திரத்தை அடையும் வரை அவருக்குக் ...

  • 16 July

    உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-20]

    துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்பது அர்த்தமாகும். இந்த மாமன்னருக்குக் கொம்புகள் இருக்கவில்லை. எனினும், இவர் கண்ட ஒரு கனவிற்கு விளக்கமாகவும் இவரது அந்தஸ்தை உயர்த்திக் காட்டவுமே இவரது மக்கள் இவரை துல்கர்னைன் (இரண்டு கொம்புகளையுடையவர்) என அழைத்தனர். இவர் ஒரு அடிமைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்து வந்தவராவார். இவரது சமூகத்தை அதிகாரமும் ஆணவமுமிக்க ஒரு கூட்டம் அடிமைப்படுத்தி இருந்தது. இவர்களது சகல உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்தன. அவர்களோ இழந்த உரிமைகளை மீளப் பெறவோ, வருகின்ற பாதிப்புகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவோ திராணியற்று அடிமைகளாக ...

  • 16 July

    வர்ணம் தீட்டுவோம்!

    ஆசிரியர் பக்கம் – ஜனவரி 2020 அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகின்றான் (முஸ்லிம்) என்பது இறைத்தூதர் முஹம்மத்(ச) அவர்களது போதனையாகும். அல்லாஹ்வைப் பற்றி குர்ஆன் அறிமுகம் செய்யும் போது, ”அஹ்ஸனுல் ஹாலிகீன்’ – அழகிய படைப்பாளன்’ (23:14, 37:125) என்று குறிப்பிடுகின்றது. இந்த வகையில் இஸ்லாம் அழகுணர்வை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கமாகும். ‘நாம் வானத்தில் கோள்களை அமைத்து, பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்;.’ (15:16) வானத்தில் கோள்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அழகாக ஆக்கினோம் என்ற வசனம் பார்ப்பதற்கு ஒரு பொருளை அழகுற வடிவமைப்பது ...

  • 16 July

    ஃபிக்ஹுல் இஸ்லாம் – 47

    -S.H.M. Ismail Salafi கிதாபுல் ஜனாயிஸ் -(ஜனாஸாவின் சட்டதிட்டங்கள்)குளிப்பாட்டத் தகுதியானவர்கள்: ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விடயத்தில் யார் பொருத்தமானவர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் யார் பொருத்தமான வர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் பொதுவாக கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நல்லவர்கள்:குளிப்பாட்டுபவர்கள் மார்க்க விழுமியங் களைப் பேணி நடப்பவராக இருக்க வேண்டும். அவர் தான் குளிப்பாட்டும் போது ஜனாஸாவில் ஏதாவது குறைபாடுகளைக் கண்டால் அதை பகிரங்கப்படுத்தாமல் மறைக்கும் அவசியத்தை உணர்ந்திருப்பார். ...

June, 2021