விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்: இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். 01. விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த ...
முஸ்லிம் உலகு
November, 2018
-
8 November
திருமண வயதெல்லை┇கட்டுரை.
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு சாரார் ...
-
2 November
ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் – உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்) ஜமால் கஷோக்ஜியின் படுகொலை விவகாரம் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம்கள் மத்தியிலும் கடந்த சில வாரங்களாக சலசலப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குள் அவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பரவலாக அறியப்பட்ட விடயமாகும். இது தொடர்பில் சில கருத்துக்களை இந்த இடத்தில் பதிவிடலாம் என எண்ணுகின்றேன். ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்காக அமெரிக்காவும் அழுகின்றது. ஐ.நா.வும் பதறுகின்றது. உண்மையில் கொலைக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் தார்மீக உரிமை ...
October, 2018
-
16 October
பாவாத மலையும் (Adam’s Peak) இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்┇Article.
இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் இதை ‘சிறீபாத’ என அழைக்கின்றனர். இந்துக்கள் இது சிவனின் பாதச் சுவடு ...
-
1 October
இளமையும் இஸ்லாமும் | Article.
இளமையும் இஸ்லாமும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றான். பின்னர் உங்கள் இளமையை நீங்கள் ...
September, 2018
-
11 September
முஸ்லிம் தனியார் சட்டம்.
அஷ்ஷெய்க்:S.H.M இஸ்மாயில் ஸலபி முஸ்லிம் தனியார் சட்டம். ”MUSLIM TANIYAR SATTAM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 05/09/2018.
July, 2018
-
28 July
சமய பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளும். | Video | Jumua | Thihari.
முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த வேண்டிய சமய பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளும் 27.07.2018. Jamiu Abeebucker As Siddeek Jumma Masjid Central Place Warana Road Thihari.
-
1 July
குருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன் | Article.
வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக நோக்குவோம். குருநாகலையும் முஸ்லிம் குடியேற்றமும்: இலங்கை முஸ்லிம்கள் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாட்டின் மத்திய பகுதியிலும் பரவலாகக் குடியேறியுள்ளனர். குறிப்பாக குருநாகலையில் ...
May, 2018
-
17 May
மத நல்லிணக்கத்திற்காக முதலில் செய்ய வேண்டியவை.
இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு உலகில் நிலவி வருகின்றது. இந்த நோய் இலங்கையையும் தொற்றியுள்ளது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் பொது மக்கள் மத்தியில் உள்ளன. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இந்த சந்தேகங்களை சாட்டாக வைத்து இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து வருகின்றனர். 1. பலதார மணம். 2. உணவுக்காக உயிர்களை அறுப்பது. 3. பெண்களின் ஆடை. 4. பெண்களின் சொத்துரிமை. இவ்வாறு மார்க்க ரீதியான சந்தேகங்கள் பல உள்ளன. எமது முஸ்லிம்களுக்கே இது பற்றி சரியான ...
-
17 May
கூரையை எரித்து குளிர் காய முடியாது.
‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் திகழ்கின்றார்களோ அதே போல் ஏனைய சமூகத்திற்கு முஸ்லிம் சமூகம் சாட்சியாகத் திகழ வேண்டும் என்பது குர்ஆனின் கூற்றாகும். இன்று முஸ்லிம் சமூகத்தின் மதிப்பையும் மானத்தையும் முஸ்லிம்களே அழித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் சமூகத்திற்கும் சமயத்திற்கும் தலை ...