By: Anan Ismail முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், இவர் மிக்க பேச்சாற்றல் மிக்கவ ராகவும் விளங்கினார். அதனால் ...
மதங்கள் ஆய்வு
February, 2019
December, 2018
-
5 December
அன்பான இறைவன் தண்டிக்கலாமா? | இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2
இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2 அன்பான இறைவன் தண்டிக்கலாமா? முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்| நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். அத்துடன் மறுமையில் இறைவன் ...
November, 2018
-
12 November
இஸ்லாம்; விமர்சனங்களும் விளக்கங்களும்┇கட்டுரை.
விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்: இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். 01. விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த ...
April, 2018
-
7 April
ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17
‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான். ‘ (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர் நிலை தடுமாற்றம் அடைந் தார்கள். இதைக் குறித்தே இந்த வசனம் ...
March, 2018
-
11 March
யூதர்களின் சூழ்ச்சிகள் | Video.
அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (16) ”YUDARGALIN SOOLCHIGAL” AL QURAN TAFHSEER CLASS (16) (SURHA AN NISA EXPLANATION) ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 28/02/2018
November, 2017
-
24 November
”இஸ்லாம் இலகு மார்க்கம்” ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (10) | Video.
அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”இஸ்லாம் இலகு மார்க்கம்” ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (10) AL QURAN TAFHSEER CLASS (10) (SURAH AN NISHA) Islam Ezlagu Markam Explanation ASHSHK SHM ISMAIL SALAFI @jtjm paragahadeniya 15/11/2017.
August, 2017
-
30 August
இயேசு கடவுள் இல்லை┇கட்டுரை
‘அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்’ (ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.’ (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் என இந்த வசனம் கூறுகின்றது. தந்தை இன்றிப் பிறந்ததால் இயேசுவைக் கடவுள் ...
-
18 August
அல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி┇கட்டுரை.
‘(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவனாவான்.’ (அல்குர்ஆன்-3:54) ஈஸா(அ) அவர்களது பிரச்சாரத்தை யூதர்கள் மறுத்தனர். சில சீடர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைபிள் சொல்லும் தகவல் பிரகாரம் அந்தக் கால அரசனுக்கு எதிராக இயேசு செயற்படுவதாக இராஜ துரோகம் செய்வதாகச் சோடித்து இயேசுவைப் பழிதீர்க்க முற்பட்டனர். இயேசு ஒவ்வொன்றிலிருந்தும் நுட்பமாகத் தப்பி வந்தார். ஈற்றில் இயேசுவைக் ...
July, 2017
-
30 July
அல் குர்ஆன் விளக்கம்┇முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?┇கட்டுரை.
‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். குர்ஆனில் தவ்றாத், இன்ஜீல் பற்றி புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகு மூஸா நபியின் வேதத்தைப் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா நபியின் போதனையை புதிய ஏற்பாடு என்றும் கூறி இரண்டையும் இணைத்து பைபிள் ...
April, 2017
-
25 April
பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர் | கட்டுரை.
இயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார், அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார் அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்களைக் கண்டித்து வழிநடாத்துவார்’ என முஹம்மத் நபி பற்றி இயேசு முழுமையான முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார். அவர் முஹம்மத் நபி குறித்துளூ பரிசுத்த ஆவியானவர், ...