பொதுவானவை

November, 2014

  • 1 November

    ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம் (தலையங்கம் – இலங்கை விவகாரம்)

    இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது. வாகனங்களுக்கு சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக இருந்தனர். இதற்காக இந்த இலங்கை நாட்டின் மைந்தர்கள் பலர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இப்படி மொழிவெறி பேசிய ஒருகாலம் இருந்தது. பலரது உயிர்களைக் காவுகொண்ட அந்த ...

  • 1 November

    எரியும் விலையேற்றத்தால் எரியும் வயிறுகள்

    இலங்கை அரசு என்றுமில்லாதவாறு வெளிநாடுகளின் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரத்தில் உள்நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென அறிவிக்கப்பட் எரிபொருட்களின் விலையேற்றம் சாதாரண மக்களைக் கதிகலங்கச் செய்துள்ளது. இந்த விலையேற்றத்துடன் மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொருளாதார நெருக்கடி நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலையேற்றங்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி பாண், அரிசி, போன்றவற்றின் விலைகளையும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. பொருட்களை இடம் மாற்றும் செலவு அதிகரிப்பதால், எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கவே செய்யும். ...

  • 1 November

    ஆயுதக் குழு பூச்சாண்டி

    இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அலவி மௌலானா வித்தியாசமானவர். ஆழ்ந்த அனுபவமும், சமூகப்பற்றுமிக்கவராகவும் மதிக்கப்பட்டு வருபவர். ஏனைய அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளாகவே பார்த்து வந்த பொதுமக்களில் சிலர் அலவி மௌலானாவை ஆன்மீகத் தலைவர் போன்று மதித்து வந்தனர். மார்க்கப்பற்றுமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். பொதுமாக்களால் மொளலானா, மௌலானா என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் அண்மையில் வெளியிட்ட சமூகத்துரோகக் கருத்துக்களால் பொதுமக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார். செத்துக் கொண்டிருக்கும் தமது அசத்தியக் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்மைக் காலமாகச் சில கயவர்கள் தமக்கு மாற்றுக் ...

  • 1 November

    ஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா

    ஈராக்கில் இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈராக்கிற்கு எதிரான போர், அங்கே மீறப்பட்ட யுத்த தர்மங்கள், மனித உரிமை ...

October, 2014

  • 31 October

    அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்

    சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும். ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் ...

  • 25 October

    மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்

    பேருவலை – மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது. பேருவளை, தர்கா டவ்ன் பகுதிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வீடுகளிலும், பொதுப் பள்ளிகளிலும் பல ஏச்சுப் பேச்சுகள், எதிர்ப்புக்கள், கல்லெறிகளுக்கு மத்தியில் தொடரப்பட்ட பிரச்சாரம், “உண்மை உதயம்” ஆசிரியரும், சகோதரர் தவ்பீக் மதனி அவர்களும் கடத்தப்பட்டுக் கர்ண கொடூரமாகத் தாக்கப்பட்டதன் பின்னர் புது வடிவம் பெற்றது. எமக்கெனத் தனிப் பள்ளிவாசல்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் பின்னர் தர்கா ...

  • 25 October

    அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்

    இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு பிரச்சினையே தீர்வாக மாறி வருகின்றது. நோன்புப் பெருநாள் விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா விட்ட தவறால் இலங்கை முஸ்லிம்களில் பலரும் ஜம்இய்யதுல் உலமா மீது அவநம்பிக்கையை ...

  • 25 October

    இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் பொறுப்பு?

    -உண்மை உதயம் மாதஇதழ்- 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் சுமார் இரண்டரை வருடங்களாக முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான இன, மத வாதப் பிரச்சாரத்தை BBS, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களது இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள் மூலம் பல பள்ளிவாயில்கள், முஸ்லிம்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு வந்தன. அனுராதபுர தர்கா உடைப்பு முதல் தர்கா நகர், பேருவலை, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் சொத்தழிப்பு வரை இந்த இனவாதக் கும்பலின் ...