உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! இனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான். மூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் செத்து விழுந்தான். இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இது தற்செயலாக நடந்தது. ...
சிறுவர் பகுதி
March, 2019
February, 2019
-
18 February
தனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’
தனித்து விடப்பட்ட தாயும் மகனும் இப்ராஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவருக்கு சாரா, ஹாஜர் என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாம் மனைவி ஹாஜர் அவர்களுக்கு இஸ்மாயீல் என்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் பிறந்த குழந்தை அது. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த இப்ராஹீம் நபி, மகன் இஸ்மாயீல் மீது பாசத்தைப் பொழிந்தனர். அல்லாஹ்வின் சோதனை வந்தது. மகன் இஸ்மாயீலையும் அவரது தாயாரையும் கஃபா அமைந்துள்ள பாலைவனப் பிரதேசத்தில் விடவேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. உலகின் ...
-
17 February
முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.
முதல் மனிதனின் முதல் தவறு அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை ஒப்புக் கொண்டான். அதன்பின் ஆதம் நபியிடம் அவற்றின் பெயர்களைக் கூறுமாறு கேட்டபோது அவர் ...
July, 2018
-
28 July
தோட்டக்கார நண்பா! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-24]
இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருக்கும் தோட்டம் இருந்தன. இருவரும் விவசாயிகள். அதில் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட இறை விசுவாசி. மற்றொருவர் இறை நிராகரிப்பில் உள்ளவர். அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ சரியான நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை. அல்லாஹ் அந்த இறை நிராகரிப்பாளருக்கு இரண்டு தோட்டங்களை வழங்கி இருந்தான். தோட்டத்தில் திராட்சை காய்த்து கொத்துக் கொத்தாக காட்சித் தந்தது. தோட்டத்தைச் சூழ பேரீத்தம் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு நடுவே வேறு பயிர்களும் செழித்து வளர்ந்தன. அந்த இரு தோட்டங்களுக்கும் மத்தியில் ஒரு ...
-
10 July
உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 4 [திருக்குர்ஆன் கூறும் கதைகள் – 23]
உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் & 4 இவ்வாறு மேற்கு நாடுகளில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய துல்கர்னைன் கிழக்குப் பகுதிகளில் பயணித்து அங்கு நிலவும் ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கைகள், அக்கிரமங்கள் அனைத்தையும் அழித்து, அல்லாஹ் நாடினால், ஆன்மீக அடிப்படையில் நல்ல சமூகத்தைக் கட்டி எழுப்ப உறுதி கொண்டார். தொடர்ந்து அவர் பயணிக்கலானார். அவருடன் அவரது போர் வீரர்கள், கலைஞர்கள், பொறியியலாளர்கள் அனைவரும் சென்றனர். அவர் ஊடறுத்துச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் உபதேசம் செய்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஒத்துழைத்தார். எதிர்த்தால் கடுமையாகத் தண்டித்தார். அவர்கள் போகும் வழியில் ஆறுகளோ, ...
April, 2018
-
26 April
தாலூதும் ஜாலூதும் | சிறுவர் பகுதி 19.
எண்ணிக்கையில் குறைந்த நாம் எப்படி அதிக எண்ணிக்கையை உடைய ஜாலூத்தின் படையை வெற்றி கொள்வது என்று கலங்கியவர்கள் ஈற்றில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய களம் இறங்கினர். தாலூதின் படை தயாரான போது எதிரிகள் அதிகமாக இருப்பதைக் கண்டனர். எனினும் உறுதியுடன் போராடத் துணிந்தனர். அல்லாஹ்விடம், “இந்தப் பெரும் படையுடன் மோதத் தக்க அளவுக்கு எம்மீது பொறுமையைச் சொரிவாயாக. போரில் இயலாமையையோ, சடைவையோ நாம் சந்திக்கக் கூடாது. புறமுதுகு காட்டி ஓடிவிடவும் கூடாது. எனவே எமது பாதங்களைப் பலப்படுத்துவாயாக. இந்த இறை ...
-
3 April
கொடுப்பதால் குறையாது [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-18]
முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார். 1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக. 2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு. 3) மூன்றாம் பகுதி ஏழை எளியவர்களுக்கு தருமம் செய்வதற்கு. அவ்வாறு வழங்குபவற்றை அவர் ஏழை ...
March, 2018
-
19 March
இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]
நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த குழந்தை மீது அன்பைப் பொழிந்தார்கள்.குழந்தையோடு பாசத்தோடும் நேசத்தோடும் பழகினார்கள். அல்லாஹ்வின் கட்டளை இந்த ...
-
11 March
மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]
முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகில் உங்களை விட அறிவாளி யாரேனும் உண்டா?” எனக் கேட்டு விட்டார். மூஸா நபியும் நமக்கு ...
February, 2018
-
22 February
குகை தோழர்களின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-15]
அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது! ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே வழிபடுவதா?” என சிந்தித்தனர். இதன் முடிவாக சிலை வணக்கம் கூடாது என்பதை உணர்ந்தனர். ...