அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும். சில வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி பல ...
கொள்கை
November, 2014
October, 2014
-
31 October
சுன்னாவும் வஹியே!
வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் உருவாக்க முடியாது. அந்த வார்த்தைகளே தனியான அற்பதமாகும். 02. வஹி கைர மத்லூ (ஓதப்படாத வஹி) இது ...
-
31 October
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?
அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் தௌஹீத் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தாகும். இருப்பினும் ...
-
31 October
அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 2
சென்ற இதழில் அகீதாவின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகள் விடயத்தில் ஈமான் கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளைப் பார்த்தோம். இது ஈமானுக்கு உரிய அம்சம். ஆய்வுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது. சொல்லப்பட்ட கருத்தை மறுக்கக் கூடாது. மாற்று விளக்கம் கூறக் கூடாது. ஒப்புவமை கூறக் கூடாது. என்கின்ற நான்கு முக்கிய அடிப்படைகள் குறித்து விரிவாகப் பார்த்தோம். மற்றும் சில அடிப்படைகளை இந்த தொடரில் புரிந்துகொள்ள இருக்கின்றோம். 5. இப்படித்தான் என கய்பிய்யத் கூறக்கூடாது: அல்லாஹ்வின் செயல்கள், பண்புகள் என்பவற்றுக்கு இப்படித்தான் அது ...
-
31 October
அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 1
இஸ்லாத்தின் அத்திபாரமாகத் திகழ்வது அகீதாவாகும். இஸ்லாமியப் பிரசாரத்தின் முக்கிய இலக்கும் அகீதாவாகும். அகீதாவைப் போதிக்காமல் அதற்கு முதன்மை வழங்காமல் இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் அடிப்படையான அகீதாவுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை உரிய முறையில் வழங்கத் தவறி விட்டன என்றே கூற வேண்டும். அகீதாவை விட ஃபிக்ஹ் மஸ்அலாக்களும், பழாயில்களும்தான் அதிகமாக மக்களிடம் தாக்கம் செலுத்தியுள்ளன. இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ்வின் அழகுத் திரு நாமங்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கையும் முக்கியமானதாகும். தவ்ஹீதை மூன்று வகைகளாகப் பிரித்து நோக்கும் அறிஞர்கள், ...
-
27 October
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)
ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா? சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம். இது குறித்துச் சகோதரர் பீஜே தனது தர்ஜமாவில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்; ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற ...
-
25 October
மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 5) ‘மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்’ சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல வழிகெட்ட பிரிவினரும் தப்பும், தவறுமான தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளனர். இந்த ஹதீஸைச் சகோதரர் பிஜே அவர்களும் பல தவறான வாதங்களின் அடிப்படையில் மறுக்கின்றார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸை மட்டுமன்றி குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் நிராகரிக்க நேரிடும் என்பதைப் பலமான ஆதாரங்களில் அடிப்படையில் நிரூபித்து வருகின்றோம். அவரது வாதமும், ஸுன்னாவை அவர் அணுகும் முறையும் தவறானது என்பதற்கு இது ...
-
25 October
மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 4)இந்த ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை தெளிவாக இத்தொடரில் விளக்கி வருகின்றோம். இந்த ஹதீஸ் நபிமார்கள், மலக்குகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்தும் நோக்குவோம். – மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளவாறு நடந்திருப்பார்களா? – நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? – இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை ...
-
25 October
மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 3) மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரும் ஆரம்ப காலத்தில் மறுத்து வந்துள்ளனர். இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறி மறுக்கப்படுவது தவறு என்பதை நாம் தெளிவுபடுத்தி வருகின்றோம். சென்ற தொடர்களில் நபிமார்களின் மரணம் சாதாரண மனிதர்களின் மரணத்துடன் மாறுபட்டது; மலக்குகள் மனித ரூபத்தில் நபிமார்களிடம் வருகை தந்துள்ளனர்; தன்னிடம் மனித ரூபத்தில் வந்த மலக்கை (மூஸா நபி அடித்ததைத்) திடிரென நடந்த ஒரு நிகழ்வு என்ற அடிப்படையில் ...