இஸ்லாம் சிலை வணக்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும், எதையும் வழிப்படக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாம் சிலை வணக்கத்தைக் கண்டிக்கின்றது என்பதனால் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாமா என்றால் கூடாது என்பது இஸ்லாத்தின் பதிலாக இருக்கும். நபி(ச) அவர்கள் மக்காவில் 13 வருடங்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நபி(ச) அவர்களும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தார்கள், கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சிலை வணக்கத்திற்கு எதிராகப் போராடி நபித்தோழர்கள் பயங்கரமான ...
கொள்கை
February, 2019
January, 2019
-
1 January
ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா?|குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (24)
فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ “அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.” (4:25) மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம். இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் வசனங்களில் அல் முஹ்ஸனாத் என்ற பதம் நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல் முஹ்ஸனாத் என்பதற்கு திருமணம் ...
December, 2018
-
29 December
பீ.ஜே. யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்| தொடர் 02 | கட்டுரை.
குர்ஆனின் நேரடி அர்த்தத்திற்கு மாற்றமாகத் தனது விளக்கத்தை முற்படுத்துதல். இவரது தர்ஜமா விளக்கக் குறிப்புக்களில் அநேகமாக இந்தத் தவறைச் செய்துள்ளார். உதாரணமாக: ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நிர்வாணமாக விடவில்லை. ஆடையுடன்தான் விட்டான் என குர்ஆன் கூறுகின்றது. ‘நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்க மாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாக இருக்கவும்; மாட்டீர்.” (20:118) ‘சுவர்க்கத்தில் நிர்வாணமாக மாட்டீர்கள்” என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததும் நிர்வாணமானார்கள். ஆனால், அவர் தனது 174 விளக்கக் குறிப்பில் அவர்கள் சுவர்க்கத்தில் நிர்வாணமாக இருந்ததாகவும் ...
-
23 December
ஷிர்க்கும் சிலந்தி வீடும் | Article
அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான். ‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை ...
-
19 December
அஹ்லுல் பித்ஆ | அடிப்படை அடையாளம். | Article.
நபி(ச) அவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். இந்த பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும். தனக்குப் பின்னர் இந்த உம்மத்தில் பித்அத்துக்கள் தோன்றும் என்றும் அப்போது நபி(ச) அவர்களது சுன்னாவையும் நேர்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறைகளையும் இறுகப் பற்றிப் பிடிக்கும் படியும் நபி(ச) அவர்கள் எமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள். ஒரு பித்அத்தான செயல் உருவாக்கப்பட்டால் அந்த பித்அத்தைச் செய்யும் பித்அத்வாதி சுன்னாவும் மார்க்கமும் விதித்த கடமைகளுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை அதற்குக் கொடுப்பதைக் காணலாம். பித்அத்வாதிகளின் நிலை ...
-
19 December
பீ.ஜே யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள் | தொடர் 01 | கட்டுரை.
இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பீ.ஜே. என சுருக்கமாக அழைக்கப்படுபவர். நல்ல நாவன்மையும் வாதத் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க இவர் தனது திறமைகளை இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணாகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது போதனைகளும் அதை அவர் முன்வைக்கும் விதமும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலும் குழப்பத்தையும் மன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணங்கிப் போகாத இவரது இயல்பு இவரது இயக்கத்தவர்களிடமும் குடிகொண்டுள்ளது. இதனால் இவரது இயக்க செயற்பாடுகளால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவதுடன் இவர்களது ...
-
5 December
அன்பான இறைவன் தண்டிக்கலாமா? | இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2
இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2 அன்பான இறைவன் தண்டிக்கலாமா? முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்| நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். அத்துடன் மறுமையில் இறைவன் ...
June, 2018
-
4 June
காபிர்களுக்கு அல்லாஹ் வழியை ஏற்படுத்தமாட்டான்.
காபிர்கள் முஃமின்களை மிகைக்கத்தக்க வழியை அல்லாஹ் ஏற்படுத்த மாட்டான். இது பற்றி குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. ‘ (நயவஞ்சகர்களான) இவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வெற்றி கிடைத்தால், ‘நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் ஒரு பங்கு கிட்டிவிட்டால், (வெற்றி கொள்ள முடியுமாக இருந்தும்) ‘உங்களை நாம் வெற்றி கொள்ளாது, நம்பிக்கையாளர்களை விட்டும் உங்களை நாம் தடுத்துவிடவில்லையா?’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் மறுமை நாளில் உங்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கையாளர்களுக்கு எதிராக நிராகரிப்போருக்கு அல்லாஹ் எந்த வழியையும் ஏற்படுத்தமாட்டான்.’ ...
April, 2018
-
7 April
ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17
‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான். ‘ (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர் நிலை தடுமாற்றம் அடைந் தார்கள். இதைக் குறித்தே இந்த வசனம் ...
-
4 April
கலிமா தையிபா | ஐ. ஹுர்ரதுன்னிஸா.
‘(லாஇலாஹ இல்லல்லாஹ் எனும்) தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகின்றான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (அது) ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப் பதிந்ததாகவும், அதன் கிளை வானளாவியதாகவும் இருக்கின்றது.’ ‘அது தனது இரட்சகனின் அனுமதி கொண்டு, எல்லா வேளைகளிலும் அதன் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு உதாரணங்களைக் கூறுகின்றான்.’ ‘(நிராகரிப்பு எனும்) கெட்ட வார்த்தைக்கு உதாரணம், கெட்ட மரத்தைப் போன்றதாகும். அது பூமியின் மேற்பகுதியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது. அதற்கு ...