கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசில் பின்னணி: இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளூராட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் இனவாத செயற்பாடுகள் மீள் எழுச்சி பெறலாம் என்ற ...
கட்டுரைகள்
April, 2018
-
4 April
சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்.
இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் குற்றம் செய்தால் அந்த இனத்தையோ மதத்தையோ தண்டிக்கவும் முடியாது, குற்றம் சுமத்தவும் முடியாது. ஒரு ...
-
4 April
நபிக்கு அதிகாரத்தில் பங்கில்லை | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 16.
‘(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.’ (3:128) உஹதுப் போரில் நபி(ச) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களது முகத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது, ‘தங்கள் நபியைக் காயப்படுத்திய ஒரு சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் மேற்படி வசனமும் அருளப்பட்டது.’ (முஸ்லிம்: 1791-104) இந்த வசனத்தின் மூலம் இஸ்லாத்தின் ஏகத்துவத்தின் உண்மை நிலை உணர்த்தப் படுகின்றது. அதிகாரத்தில் ...
-
3 April
ஜமாஅத்துத் தொழுகை – இமாமத்தும் அதன் சட்டங்களும் | பிக்ஹுல் இஸ்லாம் – 35
ஜமாஅத் தொழுவதாக இருந்தால் ஒருவர் இமாமாக தொழுகையை நடத்த வேண்டும். இமாமின் தகுதி என்ன? யார் இமாமத் செய்ய வேண்டும் என்ற விபரம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொன்றாகும். காரீஆ? பகீஹா? இமாமத் செய்பவர் அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருக்க வேண்டும் என இமாம்களான அபூ ஹனீபா மற்றும் தவ்ரீ அஹ்மத் ஆகியோர் கருதுகின்றனர். அழகிய தொனியில் ஓதுவதை விட சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு அதிகம் உள்ள பகீஹ்தான் தொழுகை நடத்த அதிகம் தகுதியானவர் என ஷாபிஈ மற்றும் மாலிக் மத்ஹபினர் ...
-
3 April
சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்
அல்லாஹுதஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக ...
-
3 April
இஸ்ராவும் மிஃராஜும்
நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜும் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: ‘அஸ்ரா’ என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. ‘(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் ...
-
3 April
கொடுப்பதால் குறையாது [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-18]
முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார். 1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக. 2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு. 3) மூன்றாம் பகுதி ஏழை எளியவர்களுக்கு தருமம் செய்வதற்கு. அவ்வாறு வழங்குபவற்றை அவர் ஏழை ...
-
2 April
தேர்தல் முடிவுகள்; பலவீனமும் படிப்பினைகளும்.
திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி தமது தொண்டர்களுக்கு ஒட்சிசன் வழங்கி வந்தாலும் உண்மையில் ஏற்பட்ட பலவீனங்களை அவர்கள் அறிவார்கள். ...
March, 2018
-
19 March
இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]
நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த குழந்தை மீது அன்பைப் பொழிந்தார்கள்.குழந்தையோடு பாசத்தோடும் நேசத்தோடும் பழகினார்கள். அல்லாஹ்வின் கட்டளை இந்த ...
-
11 March
அணுபவப் பகிர்வு… அப்துல் ஹமீல் பக்ரி (ரஹ்)
சென்னையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் ‘அஹ்லே ஹிங்’ (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி ‘நீங்கள் கொழும்பா?’ என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார். அப்துல் ஹமீத் பக்ரியின் மாணவரின் மாணவன் நான் என என்னை அறிமுகம் ...