‘(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.’ (3:159) இந்த வசனம் நபி(ச) அவர்களின் சிறப்பியல்புகளைக் காட்டுகின்றது. நபி(ச) அவர்கள் மென்மைப் போக்குள்ளவர்களாக ...
கட்டுரைகள்
May, 2018
-
21 May
உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த வகையில், உடல் ஆரோக்கியம்: 1. உணவு :- இன்று அனேகமான மாணவ, மாணவிகள் அதிமிகைத்த உடற்பருமன் உடையவர்களாக காணப்படுகின்றார்கள். கடைகளிலும், பாடசாலை, சிற்றுண்டிச்சாலைகளிலும் காணப்படும் பராட்டா, அஜினமோடோ சேர்க்கப்பட்ட குழம்பு, பெட்டீஸ், சோடீஸ் வகைகள் என்று அதிகம் காபோவைதரேட்டு, கொழுப்புச் சத்துள்ள உணவுகளையே விரும்புகின்றனர். இதனால் பலூன் போல் ஊதியுள்ளனர். ...
-
18 May
முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்.
இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது. தமிழ் சமூகமும் ஆயுதப் போராட்டமும்: தமிழ் சமூகத்திற்கு எதிராக எழுந்த இனவாத மொழிவெறி கொண்ட செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட போரில் நாட்டின் வளங்களும் அபிவிருத்தியும் நற்பெயரும் பெறுமதிமிக்க உயிர்களும் பறிபோயின. போர் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால் மிகப் பெரிய உயிர் உடைமை இழப்பை முஸ்லிம் சமூகம் சந்தித்தது. தமிழ் ...
-
17 May
மத நல்லிணக்கத்திற்காக முதலில் செய்ய வேண்டியவை.
இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு உலகில் நிலவி வருகின்றது. இந்த நோய் இலங்கையையும் தொற்றியுள்ளது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் பொது மக்கள் மத்தியில் உள்ளன. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இந்த சந்தேகங்களை சாட்டாக வைத்து இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து வருகின்றனர். 1. பலதார மணம். 2. உணவுக்காக உயிர்களை அறுப்பது. 3. பெண்களின் ஆடை. 4. பெண்களின் சொத்துரிமை. இவ்வாறு மார்க்க ரீதியான சந்தேகங்கள் பல உள்ளன. எமது முஸ்லிம்களுக்கே இது பற்றி சரியான ...
-
17 May
கூரையை எரித்து குளிர் காய முடியாது.
‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் திகழ்கின்றார்களோ அதே போல் ஏனைய சமூகத்திற்கு முஸ்லிம் சமூகம் சாட்சியாகத் திகழ வேண்டும் என்பது குர்ஆனின் கூற்றாகும். இன்று முஸ்லிம் சமூகத்தின் மதிப்பையும் மானத்தையும் முஸ்லிம்களே அழித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் சமூகத்திற்கும் சமயத்திற்கும் தலை ...
April, 2018
-
26 April
தாலூதும் ஜாலூதும் | சிறுவர் பகுதி 19.
எண்ணிக்கையில் குறைந்த நாம் எப்படி அதிக எண்ணிக்கையை உடைய ஜாலூத்தின் படையை வெற்றி கொள்வது என்று கலங்கியவர்கள் ஈற்றில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய களம் இறங்கினர். தாலூதின் படை தயாரான போது எதிரிகள் அதிகமாக இருப்பதைக் கண்டனர். எனினும் உறுதியுடன் போராடத் துணிந்தனர். அல்லாஹ்விடம், “இந்தப் பெரும் படையுடன் மோதத் தக்க அளவுக்கு எம்மீது பொறுமையைச் சொரிவாயாக. போரில் இயலாமையையோ, சடைவையோ நாம் சந்திக்கக் கூடாது. புறமுதுகு காட்டி ஓடிவிடவும் கூடாது. எனவே எமது பாதங்களைப் பலப்படுத்துவாயாக. இந்த இறை ...
-
9 April
ஜமாஅத் அணியில் எப்படி நிற்க வேண்டும். | ஜமாஅத்துத் தொழுகை | பிக்ஹுல் இஸ்லாம் – 36.
ஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் மற்றும் மஃமூம்கள் எந்த இடத்தில் எத்தகைய ஒழுங்கில் நிற்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். இமாமுடன் ஒருவர் மட்டும் தொழுதால்: இருவர் ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். ஒருவர் இமாம் மற்றவர் மஃமூம். இந்த சந்தர்ப்பத்தில் பின்பற்றித் தொழுபவர் இமாமுக்குப் பின்னால் வரிசையில் நிற்பது போன்று தொழுகின்றனர். மற்றும் சிலர் இமாமுக்கு வலது பக்கத்தில் சற்று பின்னால் நின்று தொழுகின்றனர். மற்றும் சிலர் வரிசையில் நிற்பது போல் இமாமின் வலது பக்கத்தில் இமாமுக்கு நேராக நின்று தொழுகின்றனர். இதில் மூன்றாவது ...
-
4 April
சிரியா – ஒரு போராட்ட பூமி.
சிரியாவில் பஷ்ஷாரின் ஷியா படையும், ரஷ்யாவின் நாஸ்தீகப் படையும், அமெரிக்காவின் கூலிப் படைகளும் நிகழ்த்தி வரும் கொடூர போர்க்களத்தில் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். போர்க் களத்தில் சிறுவர்களையும், பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்துள்ளது இஸ்லாம். ஆனால், இந்தப் போரில் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழியப்பட்டு சிறுவர்கள் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுகின்றனர். உலக ஊடகங்கள் இந்தக் கொடிய போரை முஸ்லிம்கள், ஷியா – சுன்னா பிரிவுகளாகப் பிரிந்து மோதிக் கொள்வதாக சித்தரிக்கின்றன. ஆனால் உண்மை அது மட்டுமல்ல. பஹ்ரைன், குவைத், சவூதி ...
-
4 April
கலிமா தையிபா | ஐ. ஹுர்ரதுன்னிஸா.
‘(லாஇலாஹ இல்லல்லாஹ் எனும்) தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகின்றான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (அது) ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப் பதிந்ததாகவும், அதன் கிளை வானளாவியதாகவும் இருக்கின்றது.’ ‘அது தனது இரட்சகனின் அனுமதி கொண்டு, எல்லா வேளைகளிலும் அதன் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு உதாரணங்களைக் கூறுகின்றான்.’ ‘(நிராகரிப்பு எனும்) கெட்ட வார்த்தைக்கு உதாரணம், கெட்ட மரத்தைப் போன்றதாகும். அது பூமியின் மேற்பகுதியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது. அதற்கு ...
-
4 April
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித்த தேரர்; கற்பிக்கும் காரணங்கள்.
இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித்த தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின’ சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித தேரர் இந்நாட்டின் பிரபல பௌத்த துறவியாவார். இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ...