கட்டுரைகள்

July, 2018

  • 23 July

    ஸகாத்தும்… சேமிப்பும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்-22]

    ஸகாத்தும் சேமிப்பும்: وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِه هُوَ خَيْـرًا لَّهُمْ‌ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِه يَوْمَ الْقِيٰمَةِ  وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ ‘அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு நல்லது என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீயதே! எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை அவர்களுக்கு மறுமை நாளில் கழுத்தில் வளையங்களாக ...

  • 22 July

    செழிப்புடன் வாழும் இறை நிராகரிப்பாளர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 21]

    وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِم اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏ ‘மேலும், அவர்களை நாம் (உடனுக்குடன் தண்டிக்காது) விட்டு வைப்பது தங்களுக்கு நல்லது என நிராகரிப்போர் எண்ண வேண்டாம். நாம் அவர்களை விட்டு வைத்திருப்பதெல்லாம் பாவத்தை அவர்கள் அதிகரித்துக் கொள்வதற்கே. மேலும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. ‘ (3:178) முஸ்லிம்கள் உலகில் செழிப்பாக வாழ வேண்டும், காபிர்கள் அழிய வேண்டும் என எம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால், அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு ...

  • 22 July

    பிரித்துக் காட்டப்பட்ட முனாபிக்குகள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 20]

    مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِه مَنْ يَّشَآءُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِه‌ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ‏ ‘நல்லவரிலிருந்து தீயவரை பிரித்தறியும் வரை நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை விட்டு விடுபவனாக இல்லை. மேலும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தருபவனாக இல்லை. எனினும், அல்லாஹ் தனது ...

  • 10 July

    அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 19]

    அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது: لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ‌ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ  وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏ ‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை. நாங்கள் செல்வந்தர்கள்’ என்று கூறியவர்களின் வார்த்தையை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியவற்றையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்வோம். மேலும், (மறுமையில்) ‘சுட்டெரிக்கும் வேதனையை சுவையுங்கள்!’ என்றும் கூறுவோம்.’ (3:181) அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யார்? ...

  • 10 July

    உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 4 [திருக்குர்ஆன் கூறும் கதைகள் – 23]

    உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் & 4 இவ்வாறு மேற்கு நாடுகளில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய துல்கர்னைன் கிழக்குப் பகுதிகளில் பயணித்து அங்கு நிலவும் ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கைகள், அக்கிரமங்கள் அனைத்தையும் அழித்து, அல்லாஹ் நாடினால், ஆன்மீக அடிப்படையில் நல்ல சமூகத்தைக் கட்டி எழுப்ப உறுதி கொண்டார். தொடர்ந்து அவர் பயணிக்கலானார். அவருடன் அவரது போர் வீரர்கள், கலைஞர்கள், பொறியியலாளர்கள் அனைவரும் சென்றனர். அவர் ஊடறுத்துச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் உபதேசம் செய்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஒத்துழைத்தார். எதிர்த்தால் கடுமையாகத் தண்டித்தார். அவர்கள் போகும் வழியில் ஆறுகளோ, ...

  • 2 July

    ஜமாஅத்துத் தொழுகை – பிக்ஹுல் இஸ்லாம் – 38

    வரிசையை சீர் செய்வதும் இடைவெளியை நிரப்புதலும்: தொழுகையில் சிலர் வரிசையில் நேராக நிற்பதில்லை. சிலர் இடைவெளி விட்டு நிற்கின்றனர். மற்றும் சிலர் முன் வரிசை பூரணமாகாமலேயே அடுத்தவரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.’ என நுஃமான் இப்னு பஷீர்(ர) அறிவித்தார். (புகாரி: 717, முஸ்லிம்: 436-127, அபூதாவூத்: 663, திர்மிதி: 227) இந்த நபிமொழியில் வரிசை நேராக இல்லாமல் முன்பின்னாக இருப்பது மிகக் ...

  • 2 July

    முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?

    முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் பெண்கள் இப்போது அணியும் ஆடையைத்தான் முப்பது வருடங்களுக்கு முன்னரும் அணிந்தார்களா? குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட ...

  • 1 July

    குருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன் | Article.

    வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக நோக்குவோம். குருநாகலையும் முஸ்லிம் குடியேற்றமும்: இலங்கை முஸ்லிம்கள் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாட்டின் மத்திய பகுதியிலும் பரவலாகக் குடியேறியுள்ளனர். குறிப்பாக குருநாகலையில் ...

June, 2018

  • 4 June

    காபிர்களுக்கு அல்லாஹ் வழியை ஏற்படுத்தமாட்டான்.

    காபிர்கள் முஃமின்களை மிகைக்கத்தக்க வழியை அல்லாஹ் ஏற்படுத்த மாட்டான். இது பற்றி குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. ‘ (நயவஞ்சகர்களான) இவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வெற்றி கிடைத்தால், ‘நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் ஒரு பங்கு கிட்டிவிட்டால், (வெற்றி கொள்ள முடியுமாக இருந்தும்) ‘உங்களை நாம் வெற்றி கொள்ளாது, நம்பிக்கையாளர்களை விட்டும் உங்களை நாம் தடுத்துவிடவில்லையா?’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் மறுமை நாளில் உங்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கையாளர்களுக்கு எதிராக நிராகரிப்போருக்கு அல்லாஹ் எந்த வழியையும் ஏற்படுத்தமாட்டான்.’ ...

May, 2018

  • 30 May

    ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? | பிக்ஹுல் இஸ்லாம் – 37

    இமாம் உயர்ந்த இடத்தில் நிற்பது: மஃமூம்கள் அனைவரை விடவும் பிரத்தியேகமாக இமாம் மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவிப்பதை பெரும்பாலான அறிஞர்கள் வெறுக்கத்தக்கதாகப் பார்க்கின்றனர். எனினும் பின்னால் இருப்பவர்களுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவதில் குற்றமில்லை. ‘நபி(ச) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ர) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது(ர) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது ...