கட்டுரைகள்

October, 2014

  • 27 October

    பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

    மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை! பித்அத்துக்கள், அதைச் செய்வோரை நரகத்தை நோக்கியே இழுத்துச் செல்லும். மார்க்கத்தின் பெயரால் உருவான இத்தகைய ஆபத்தான பித்அத்துக்கள் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூண்றியுள்ளன. இவை வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டியவை ஆகும். பித்அத்துக்களைக் களைய வேண்டுமென்றால், பித்அத்துக்கள் ...

  • 27 October

    பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை

    அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது. ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று ...

  • 27 October

    அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-3)

    பிளவைத் தடுக்க பிரச்சாரத்தைத் தவிர்க்கலாமா? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். கோபத்தோடு வந்த மூஸா(அலை) அவர்கள் “ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது? ...

  • 27 October

    அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-2)

    அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம் இலங்கைத் திரு நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகுமுறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன. எதைப்பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும்? எதற்கு எந்தளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்ற வினாவிற்குப் பலரும் பல விதத்தில் பதிலளிக்கின்றனர். இன்றைய இஸ்லாமிய “உம்மத்” அதன் அடிப்படைக் கடமையான தொழுகையைப் புறக்கணித்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, தொழுகைக்காக அழைப்பது அவசியமானதாகும். ...

  • 27 October

    அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)

    மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும். நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். “இதைச் செய்யுங்கள்” அல்லது “அதைச் செய்யாதீர்கள்” என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது ...

  • 27 October

    மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)

    ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா? சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம். இது குறித்துச் சகோதரர் பீஜே தனது தர்ஜமாவில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்; ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற ...

  • 27 October

    பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?

    நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் ...

  • 27 October

    நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள் (1)

    “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும். இதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது ...

  • 27 October

    புகை! உனக்குப் பகை!

    வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர். சினிமா நடிகர்கள் ஊதித் தள்ளுவதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகக் காட்டி வருவதால் வளரும் இளைஞர்களிடம் இந்த ஆபத்து விரைவாக ஒட்டிக்கொள்கின்றது. சில இளைஞர்கள் புகையை ஒரு இழு இழுத்து விட்டு, வட்ட வட்டமாக ...

  • 27 October

    மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

    புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும். நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது. “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று ...