கட்டுரைகள்

October, 2014

  • 28 October

    மேற்கின் கழுகுப் பிடிக்குள் லிபியா!

    லிபியா ஒரு இஸ்லாமிய நாடு! போராட்டக் குணம் கொண்ட நாடு! இத்தாலியின் அடக்குமுறைக்கு எதிராக உமர் முக்தாரின் தலைமையில் வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டம் நடத்திச் சாதனை படைத்த நாடு! சர்வாதிகாரி முஸோலினியின் அதிகாரக் கனவை ஆட்டங்காணச் செய்த உயிரோட்டம் மிக்க சுதந்திரப் போராளிகளைப் பெற்றெடுத்த நாடு! வீரம் விளைந்த மண்! கடந்த 42 வருடங்களாக லிபியாவை ஆட்சி செய்யும் கேர்னல் கடாபி அமெரிக்க எதிர்ப்புக் கோசமொன்றை மட்டும் முன்வைத்துப் பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் தன்னை ஹீரோவாகக் காட்டிக் கொண்டவர். இவர் அமெரிக்க எதிர்ப்பாளர். ...

  • 27 October

    நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-3)

    தேக்க நிலையும் அதற்கான காரணங்களும் ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர். அறிவியல்துறையில் முஸ்லிம்கள் தேக்க நிலையை அடைந்தமைக்குப் பல காரணங்களை இனங்காட்ட முடியுமாயினும் பிரதானமான காரணங்கள் இங்கு கோடிட்டுக்காட்டப்படுகின்றன. 1. அல் குர்ஆன், சுன்னா புறக்கணிக்கப்பட்டமை முஸ்லிம் சமூகம் குர்ஆன் சுன்னாவை விட்டும் தூரமானது அல்லது அவற்றை ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமுரியதாக காணமுற்பட்டமை பிரதான காரணங்களில் ஒன்றாகும். முஸ்லிம்கள் ...

  • 27 October

    நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-2)

    சென்ற தொடரில் மருத்துவம், இரசாயனவியல், வானவியல், கணிதம் போன்ற அறிவியல் துறைகளில் முஸ்லிம்கள் அடைந்திருந்த முன்னேற்றம் குறித்து சுருக்கமாக நோக்கினோம். அதன் தொடரில் புவியில் குறித்து இவ்விதழில் நோக்குவோம். புவியியல்: முஸ்லிம்களால் வளர்க்கப்பட்ட அறிவியல் கலைகளுள் புவியியலும் முக்கியமானதாகும். புவியியல் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளை நீக்கியவர்கள் முஸ்லிம்கள்தான். புவி தட்டையானது என்ற கருத்தை மறுத்து அது உருண்டையானது என்ற கருத்தை மேற்குலகுக்கு உணர்த்தியவர்கள் முஸ்லிம்களே. இதன் மூலம் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தவர்களும் முஸ்லிம்களே. அப்பாஸிய கலீபா மாஃமூனின் ...

  • 27 October

    நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-1)

    இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார்.(1) அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. (2) வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன.  நபி(ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது ...

  • 27 October

    மக்கள் புரட்சியால் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழுமா?

    டியூனிசியாவின் ஜெஸ்மின் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து, லிபியா ஜோர்தான், சிரியா, பஹ்ரைன், ஈரான், மொரொக்கோ என முஸ்லிம் நாடுகளை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கதிகலக்கிக்கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சியாளர்களின் அடிவயிற்றில் இந்தப் புரட்சிகள் தீ மூட்டியுள்ளன. அடுத்த நாடு எது என்ற மனநிலையில் மன்னர்கள் வினாடிகளைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீ போன்று பரவும் மக்கள் புரட்சிகள், முஸ்லிம் நாடுகளைக் குறி வைத்துச் சுழல்வதைப் பார்க்கும் போது இதன் பின்னணி என்ன என்று ஐயப்பட வேண்டியுள்ளது. டியூனிசியாவில் முஹம்மத் அஸீஸி எனும் ஏழை மரக்கறி ...

  • 27 October

    குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (ebook & ibook)

    இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download (PDF) ebook for PC and ipad Download ibook for iphone and ipod

  • 27 October

    குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்

    குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது. குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது. இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் ...

  • 27 October

    குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-5)

    திட்டுவதையும், குறை கூறுவதையும் தவிர்த்தல்: சில பெற்றோர் எப்போதும் தமது குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டும், குத்திப் பேசிக்கொண்டும் இருப்பர். அவர்களின் பணிகளில் குறை காண்பதில் இவர்களுக்கு அளாதிப் பிரியம் இருக்கும். இருப்பினும் குழந்தைகளின் நன்மைகளையோ, திறமைகளையோ மறந்தும் கூட இவர்கள் போற்றுவதும் இல்லை; புகழ்வதுமில்லை. இதனைப் பின்வரும் விதமாக ஒரு கவிஞன் பாடுவதை இவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்; ஊக்கமருந்தினைப் போன்றது பெற்றோர் போற்றும் புகழுரைகள் நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றது கற்றோர் கூறும் அறிவுரைகள் பிள்ளைகள் பெற்றோரின் புகழுரைகளை விரும்புகின்றனர். இது அவர்களை ...

  • 27 October

    குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-4)

    சிநேகம் கொள்ளுதல்: பெரியவர்களிடமிருந்து அறிவையும், ஒழுக்கத்தையும், சமூகப் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ளும் விதமாகச் சிறுவர்கள் பெரியவர்களுடன் சினேகம் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர். இளம் பிராயத்தினருடன் சமூக அந்தஸ்த்துப் பெற்ற பெரியவர்கள் நெருக்கமாகப் பழகும் போது அவர்கள் மகிழ்வடைகின்றனர். அதைத் தமக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றனர். தாமும் சமூகத்தில் மதிக்கத்தக்க பிரஜையாக மாறிவிட்டதாக உணர்கின்றனர். இந்த வகையில் சமூக-சமயப் பெரியவர்கள் சிறுவர்களுடன் சிநேகம் கொள்வது அவர்களது ஆளுமையை விருத்தி செய்யும். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் இளம் சிறுவர்களுடன் சிநேகமாகப் பழகியுள்ளார்கள். அவர்களது அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப அவர்களுக்குப் ...

  • 27 October

    குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-3)

    சிறுவர்களைக் காணாத போது தேடுதல்: தந்தை வீட்டுக்கு வந்ததும் தனது பிள்ளைகள் குறித்து விசாரிக்க வேண்டும். குழந்தைகள் எங்கேனும் சென்று வரத் தாமதித்தால் அவர்களைத் தேடவேண்டும். இது குழந்தைக்கு எமது பெற்றோர் எம்மீது அக்கறையாக உள்ளனர் என்ற உணர்வை ஊட்டும் நாம் வெளியிடங்களுக்குச் சென்றால் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடவேண்டும். இல்லை என்றால் எமது பெற்றோர் எமது வருகையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த உணர்வு குழந்தைகளைத் தவறான வழியில் செல்லாமல் காக்கும் ...