வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் உருவாக்க முடியாது. அந்த வார்த்தைகளே தனியான அற்பதமாகும். 02. வஹி கைர மத்லூ (ஓதப்படாத வஹி) இது ...
கட்டுரைகள்
October, 2014
-
31 October
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?
அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் தௌஹீத் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தாகும். இருப்பினும் ...
-
31 October
கட்டிடத்தின் கடைசிக் கல்
எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான உதாரணம் ஒரு கட்டிடத்தைக் கட்டிய மனிதனின் உதாரணத்தை ஒத்ததாகும். “அந்த மனிதர் ஒரு வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டினார். ஒரேயொரு கல் வைக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டார். அந்த வீட்டை மக்கள் சுற்றிப் பார்த்து (அதன் அழகையும், நேர்த்தியையும் கண்டு) வியந்தனர். இந்த இடத்தில் உள்ள கல் மட்டும் வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கூறினர். விடுபட்ட அந்த இடத்தை அடைக்கும் கல் நானாவேன். நான் நபிமார்களில் இறுதியானவன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறி: ...
-
31 October
அல்குர்ஆன் பார்வையில் ஸஹாபாக்கள்
நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்திலேயே மரணித்தவர்கள்தான் ஸஹாபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸாஹிப் என்றால் நண்பர் என்பது அர்த்தமாகும். ஸஹாபா என்றால் நபி(ஸல்) அவர்களின் நண்பர், தோழர் என்பது அர்த்தமாகும். இவ்வகையில் ஸஹாபி என்றால் நபித்தோழர் என்பது அர்த்தமாகும். அல்லாஹ்வின் தூதரின் தோழர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்பிற்கும். அந்தஸ்த்திற்கும், நேர்வழிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இஸ்லாத்தில் தோன்றிய எந்த வழிகெட்ட அமைப்பாக இருந்தாலும் அந்த அமைப்புக்கள் நபித்தோழர்களை உரிய முறையில் மதிக்காதவர்களாகவே இருந்தனர். ஷீயாக்கள், ...
-
31 October
புதுவாழ்வு பிறக்கட்டும்
இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறையை அடிப்படையாகக் கொண்டதாகும். பிறைமாதத்தின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது ஹிஜ்ரி 1432 முடிவுற்று, ஹிஜ்ரி 1433 துவங்கியிருக்கும். இஸ்லாமிய புது வருடம் பிறந்திருக்கும். இஸ்லாத்தில் புது வருடத்திற்கென தனியான எந்தக் கொண்டாட்டங்களும் இல்லை. என்றாலும், இஸ்லாமிய மாதக் கணிப்பீட்டையும், ஒரு வருடம் முடிகின்றது. மறு வருடம் தொடர்கின்றது என்ற உண்மையுமாவது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பது அவசியமாகும். அல்லாஹ் உங்களை விசாரிப்பதற்கு முன்னர், உங்களை நீங்களே சுயவிசாரனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுவர். ...
-
31 October
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி
உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்பதைக் காணலாம். அவர்கள் ஏற்படுத்திய அந்த மகத்தான புரட்சி குறித்து சில விடயங்களை மிகச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டலாம் என எண்ணுகின்றேன். உலகம் பல்வேறுபட்ட ஆன்மீகப் ...
-
31 October
பித்அதுல் ஹஸனா (தொடர்-4)
சில அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறுகின்றனர். அதேவேளை அவர்கள் மற்றும் பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கண்டித்துள்ள பித்அத்துக்களுக்கும், இவர்கள் பித்அதுல் ஹஸனா என்று கூறும் பித்அத்துக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பித்அத்தை நல்லது, கெட்டது என்று எந்த அடிப்படையில் பிரிக்கின்றனர் என்பது புரியவில்லை. நல்ல பித்அத், கெட்ட பித்அத் என்று கூறுகின்றனர். பித்அதுல் ஹஸனா எது என்று கேட்டால் நல்ல பித்அத் என்கின்றனர். பித்அதுல் ஸைய்யிஆ எது எனக் கேட்டால் கெட்ட பித்அத் என்கின்றர். அதேவேளை பல பித்அத்துக்களைக் ...
-
31 October
பித்அதுல் ஹஸனா (தொடர்-3)
பித்அத் கூடாது என்று கூறும் போது மாற்றுக் கருத்துள்ள சில அறிஞர்கள் பித்அத் கூடாது தான் இருந்தாலும் நல்ல பித்அத் (பித்அதுல் ஹஸனா) ஆகுமானது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது தவறானது என்பது குறித்தும் பித்அத்தில் (வழிகேட்டில்) நல்ல பித்அத் (நல்ல வழிகேடு) என்று ஒன்று இல்லை என்பது குறித்து கடந்த இதழ்களில் நாம் பார்த்தோம். இது குறித்து மேலதிக தெளிவுக்காக இவ்வாக்கம் எழுதப்படுகிறது. “பித்அதுல் ஹஸனா” என்ற ஒன்று இல்லை என்று கூறும் போது மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா என்ற ...
-
31 October
பித்அதுல் ஹஸனா (தொடர்-2)
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்கள் என்பதையும், பித்அத் கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதையும் பித்அத்தினால் ஏற்படக் கூடிய பாரதூரமான மார்க்க ரீதியான விபரீதங்களையும் பார்த்தோம். இந்த விபரீதங்களைக் கருத்திற்கொள்ளாத சிலர் சில தவறான வாதங்களை முன்வைத்து நல்ல பித்அத்தும் இருக்கின்றதென வாதிக்கின்றனர். இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால் நபி(ச) அவர்கள் பித்அத்களைக் கண்டித்ததில் அர்த்தமில்லாமல் போகும். “எல்லா பித்அத்களும் வழிகேடுகளே!” என்று கூறியதில் அர்த்தமற்றுப் போய் விடும். இந்த மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டதென்ற குர்ஆனின் கூற்றை மறுப்பது போன்று ...
-
31 October
பித்அதுல் ஹஸனா (தொடர்-1)
கடந்த பல இதழ்களில் பித்அத் குறித்து பல்வேறுபட்ட அம்சங்களை நாம் விளங்கி வந்தோம். கடந்த இரு இதழ்களிலும் பித்அத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துப் பார்த்தோம். பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர். பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது. “எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே” என்று நபி (ஸல்) ...