கட்டுரைகள்

November, 2014

  • 2 November

    இலங்கை முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யலாம்

    அனுராதபுர ஷியார உடைப்பு முதல் இன்றுவரை முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இனவாத செயற்பாடுகளையும் அது தொடர்பில் அரசின் அசமந்தப் போக்கையும் கண்டு மனம் நொந்து போயுள்ளனர். கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எனக் களைத்துப் போயுள்ளனர். மன ரீதியாக முஸ்லிம்கள் பெரும் உளைச்சலுக்கும் சோர்வுக்கும் உள்ளாகியுள்ளனர். எனவே, முதலில், 1. முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் தரக்கூடிய விதத்தில் எமது பேச்சு, எழுத்து, செயற்திட்டங்களை அமைக்க வேண்டியுள்ளது. இந்த வகையில் உலமாக்களும் இயக்கங்களும் அச்சமூட்டும் உரைகளையும் உபதேசங்களையும் குறைத்து ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டும் வழிமுறைகள் பக்கம் கவனம் செலுத்த ...

  • 2 November

    தலையங்கம் (இலங்கை முஸ்லிம்கள்)

    முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், வன்முறைகள் என்பன இலங்கை நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர்ந்தும் முஸ்லிம்கள் மன உழைச்சலுக்கும், மத நிந்தனைகளுக்கும் அவதூறுப் பிரச்சாரத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். 17.03.2013 கண்டியில் நடைபெற்ற பொதுபலசேனாவின் பொதுக் கூட்டத்தில் தமக்குப் பின்புலமாக இருப்பது யார் என்பதை மிகத் தெளிவாகவே அவர்கள் அறிவித்துவிட்டார்கள். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களும் அரசியல் யாப்பின் அடிப்படையில் மக்களை வழிநடத்த வேண்டியவர்களும் இனவாத, மதவாத சக்திகளுக்குப் பக்க துணையாக மாறிவிட்டார்கள். ...

  • 2 November

    ஷீஆக்களிடம் சில கேள்விகள் – 06

    நபி(ச) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முற்பட்டனர். அபூபக்கர், உமர், அபூ உபைதா(வ) ஆகியோர் அவர்களிடம் சென்று பேசிய பின்னர்தான் அந்த இடத்தில் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்டது. அன்ஸாரிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தீர்மானித்த பின்னரும் தமது முடிவில் இருந்து பின்வாங்கி ஏன் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்தார்கள் என்று கேட்டால் பின்வரும் ஏதானும் ஒரு பதிலை ஷீஆக்கள் கூறலாம். 1. அபூபக்கர் ஆயுத பலம் மூலம் அவர்களை அடக்கி பைஅத் செய்வித்துக் கொண்டார்கள். இப்படிக் கூறினால் ...

  • 2 November

    பெண்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு! ஒரு சமய, சமூகவியல் பார்வை

    ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும் என்பதால் விரிவான இந்த ஆக்கத்தை வெளியிடுகின்றோம். ஏற்கனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டுக்குப் பெண்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் போன்றோர் நிச்சயமாக இந்த ஆக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏற்பவர் ஏற்கலாம், எதிர்ப்பவர் எதிர்க்கலாம், போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற ...

  • 2 November

    பொதுபலசேனா வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?

    பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும்.முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துவதற்காகவே இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். முதன் முதலில் அனுராதபுரத்தில் நாநூறு வருடம் பழைமை வாய்ந்த சியாரத்தை பொலிஸார் பார்த்திருக்க உடைத்தனர். இது வஹாபிகளுக்குரியதா? வஹாபிகள் ஷியாரங்கள் உடைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் அல்லவா? அதன் பின்னர் ...

  • 2 November

    ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!

    தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். நடந்த ஆண்டு நினைவில் இல்லை. நான் சின்னப் பிள்ளை. அப்போது திருகோணமலை ஜமாலிய்யா நாம் வசித்து வந்தோம். எமது வீட்டு வேலியுடன் சிரிமாபுர என்ற சிங்களப் பகுதி ஆரம்பமாகியது. இனக் கலவரக் காலம் அது. ஒரு தமிழ் இளைஞர் முஸ்லிம் கடைக்கு பொருள் ...

  • 2 November

    சிறுவர்களும் உளச்சோர்வும்

    தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது. இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும். நீண்ட கால மனச் சிக்கல்களுக்கும் நடத்தை மாற்றங்களுக்கும் அது வழிவகுக்கும். இந்த வகையில் குழந்தைகளிடம் மனப் பாதிப்பையும் உளச் சோர்வையும் ஏற்படுத்தும் காரண்ங்கள் சிலவற்றை இந்தக் கட்டுரையின் மூலம் இனம் காட்ட ...

  • 2 November

    சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு

    இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை ...

  • 2 November

    புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்

    பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம். 01. அருள் வளம் பொருந்திய பூமி: பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது. “அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71) இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது. “எனது ...

  • 2 November

    பலரின் கண்களைத் திறக்கச் செய்து கண்மூடிய மங்கை

    09.01.2013 அன்று 11.40 மணியளவில் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வு பாரிய அதிர்வுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் இதைச் சாட்டாக வைத்து ஷரீஆ சட்டம் காட்டு மிராண்டித்தனமானது, கொடுமையானது எனக் கூப்பாடு போடுகின்றனர். மற்றும் சிலர் கொள்கை ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் சவுதி மீதுள்ள கோபத்தைக் கக்குவதற்கான ஊடகமாக இந்த சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளனர். மற்றும் சிலர் ரிஸானாவை மன்னிக்காத அந்த இறந்த பிள்ளையின் தாயின் கல்மனதைச் சாடுகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டி ...