சமூகக் கட்டமைப்பின் அத்திவாரமாகத் திகழ்வது குடும்பக் கட்டமைப்பாகும். குடும்பக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டால் சமூகக் கட்டமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். மனிதனை ஓரளவாவது நிதான சிந்தனையுடன் செயற்பட வைப்பது குடும்பப் பொறுப்பாகும். குடும்பக் கட்டமைப்பு சிதைந்துவிட்டால் பொறுப்புணர்வு குண்றிவிடும். அதன் பின்னர் அவிழ்த்துவிட்ட மாடு போன்று அவரவர் அவரவரது மனம் போன போக்கில் போக ஆரம்பித்துவிடுவர். கணவன்-மனைவி என்கின்ற உறவு இல்லையென்றால் ஆணும் பெண்ணும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கின்ற நிலை தோன்றிவிடும். இந்நிலை பெருமளவில் வெளியுலகில் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறே பெற்றார்-பிள்ளை ...
கட்டுரைகள்
November, 2017
-
13 November
நபிமார்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி (அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 11)
‘நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அருளிய பின் உங்களிட மிருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், ‘அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவருக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?’ என அல்லாஹ் நபி மார்களிடம் உறுதிமொழி வாங்கி, நீங்கள் இதை ஏற்றுக் கொண்டு எனது பலமான உடன்படிக்கையை எடுத்துக் கொண்டீர்களா? எனக் கேட்டபோது, ‘நாம் ஏற்றுக் கொண்டோம்’ என அவர்கள் கூறினர். அ(தற்க)வன், ‘நீங்களே (இதற்கு) சாட்சியாக இருங்கள். உங்களுடன் நானும் சாட்சியாளர்களில் உள்ளவனாவேன்’ என்று கூறியதை (எண்ணிப்பாருங்கள்.)’ ‘எனவே, இதன் பின்னரும் எவரேனும் ...
-
10 November
அச்சநேரத் தொழுகை | கட்டுரை.
உண்மையில் இது ஒரு தனித் தொழுகை அன்று. அன்றாடம் தொழும் ஐவேளைத் தொழுகையைத்தான் இது குறிக்கின்றது. போர்க்களத்தில் எதிரிகளுடன் சண்டை செய்யும் போது அல்லது எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடும் போது தொழும் நேரம் வந்தால் எப்படித் தொழுவது என்பது பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் இதுவாகும். உண்மையில் போர்காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள், தொழுகையின் முக்கியத்துவத்தையும் ஜமாஅத்துத் தொழுகையின் அவசியத்தையும் அத்துடன் தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் ஒரே இமாமின் கீழ் நின்று ஒரு அணியாகத் தொழுவதன் அவசியத்தையுமே வலியுறுத்துகின்றன. அச்சமோ, ...
-
6 November
முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் | கட்டுரை.
ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இம்மாதத்தை நபி(ச) அவர்கள் ‘ஷஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்கள். பொதுவாக எல்லா மாதங்களும் அல்லாஹ்வின் மாதம்தான் என்றிருப்பினும் முஹர்ரம் மட்டும் ஏன் அல்லாஹ்வின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது என்ற ஐயம் எழலாம். எல்லாமே அல்லாஹ்வுக்குரியது என்றிருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்பட்டால் அது அப்பொருளின் சிறப்பைக் குறிப்பதாகச் கொள்ளப்படும். அல்லாஹ் ஸாலிஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஒட்டகத்தை அல்குர்ஆன் ‘நாகதுல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒட்டகம் என்று குறிப்பிடுகின்றது. எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ்வுடையதுதான். என்றாலும் ...
-
2 November
ரேஹிங்கியா ஒரு வரலாற்றுத் துரோகம்!!
மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! ‘ஆங்சான் சூகி’ – ‘அசின் விராது’ கொடூரக் கொலைக் களத்தின் கோர முகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் அல்லர், வந்தேறிகள் என்று கூறித்தான் இந்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும், ...
August, 2017
-
30 August
இயேசு கடவுள் இல்லை┇கட்டுரை
‘அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்’ (ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.’ (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் என இந்த வசனம் கூறுகின்றது. தந்தை இன்றிப் பிறந்ததால் இயேசுவைக் கடவுள் ...
-
29 August
இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்┇கட்டுரை
ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல்லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் சிறப்புத் தகுதியை இதனால் இழக்க நேரிடுகின்றது. ‘அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் ...
-
27 August
அதானும் இரண்டு இகாமத்துக்களும்┇கட்டுரை
இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது முதலில் அதான் கூறி அதன் பின்னர் இகாமத் கூறி முதல் தொழுகையைத் தொழுது முடித்து ஸலாம் கூறி பின்னர், அடுத்த தொழுகைக்காக மீண்டும் அதான் சொல்லப்பட மாட்டாது. இகாமத் மட்டும்தான் சொல்லப்படும். இரண்டு தொழுகைகளுக்குமிடையில் வேறு சுன்னத் தொழுகையும் கிடையாது. நபி(ச) அவர்களது அரபா,முஸ்தலிபா தொழுகை பற்றி நபிமொழிகளில் பின்வருமாறு பேசப்பட்டுள்ளது. ‘பின்னர் அதான் கூறினார். பின்னர் இகாமத் கூறி ழுஹர் தொழுவித்தார். பின்னர் இகாமத் கூறி அஸரைத் தொழுவித்தார். அவை இரண்டுக்கும் இடையில் எதுவும் தொழவில்லை. ...
-
23 August
உஸ்மான் (رضي الله عنه) அவர்களின் கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்┇கட்டுரை.
துல் ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடுகளையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (رضي الله عنه) அவர்கள் தனது பதவியையும் உயிரையும் காப்பதற்காக ...
-
23 August
உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்┇கட்டுரை
துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன. குர்பானை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எதை வேண்டுமானாலும் குர்பான் கொடுக்கலாம். ஆனால், உழ்ஹிய்யாவுக்கு காலம், நேரம், கொடுக்கப்படும் பிராணி அனைத்துமே வரையறை ...