“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.” “நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)” “சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறியது.” “அவர்களை ஆட்சி ...
இஸ்லாமிய வாரலாறு
December, 2017
-
2 December
எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]
“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.” “ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.” “அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் வசிப்பிடங்களுக்குள் நீங்கள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியது.” “அதன் பேச்சினால் சிரித்தவராக புன்னகை ...
November, 2017
-
11 November
அழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]
திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2 -அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)- அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது! யானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன? ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது? என அறிந்து கொள்ள ஆவலாய் ...
-
6 November
முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் | கட்டுரை.
ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இம்மாதத்தை நபி(ச) அவர்கள் ‘ஷஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்கள். பொதுவாக எல்லா மாதங்களும் அல்லாஹ்வின் மாதம்தான் என்றிருப்பினும் முஹர்ரம் மட்டும் ஏன் அல்லாஹ்வின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது என்ற ஐயம் எழலாம். எல்லாமே அல்லாஹ்வுக்குரியது என்றிருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்பட்டால் அது அப்பொருளின் சிறப்பைக் குறிப்பதாகச் கொள்ளப்படும். அல்லாஹ் ஸாலிஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஒட்டகத்தை அல்குர்ஆன் ‘நாகதுல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒட்டகம் என்று குறிப்பிடுகின்றது. எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ்வுடையதுதான். என்றாலும் ...
-
2 November
ரேஹிங்கியா ஒரு வரலாற்றுத் துரோகம்!!
மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! ‘ஆங்சான் சூகி’ – ‘அசின் விராது’ கொடூரக் கொலைக் களத்தின் கோர முகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் அல்லர், வந்தேறிகள் என்று கூறித்தான் இந்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும், ...
October, 2017
-
22 October
காகத்தின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்.]
திருக்குர்ஆன் கூறும் கதைகள் -அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)- சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது. இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் ...
-
4 October
சர்வதேச அலட்சியத்திற்கு மத்தியில் றோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை | ODDAMAVADI.
ராபிதாவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு. காலம்: 22.09.2017 வெள்ளிக்கிழமை. இடம்: ஹிழ்ரிய்யா ஜும்ஆ மஸ்ஜித் மாஞ்சோலை.
August, 2017
-
23 August
உஸ்மான் (رضي الله عنه) அவர்களின் கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்┇கட்டுரை.
துல் ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடுகளையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (رضي الله عنه) அவர்கள் தனது பதவியையும் உயிரையும் காப்பதற்காக ...
July, 2017
-
30 July
அல் குர்ஆன் விளக்கம்┇முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?┇கட்டுரை.
‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். குர்ஆனில் தவ்றாத், இன்ஜீல் பற்றி புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகு மூஸா நபியின் வேதத்தைப் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா நபியின் போதனையை புதிய ஏற்பாடு என்றும் கூறி இரண்டையும் இணைத்து பைபிள் ...
May, 2017
-
16 May
பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை.
அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது. ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று ...