மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது. மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். “பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் மீது ஈர்ப்பு இருந்தது. அதேவேளை அவர்கள் மாட்டையும் நேசித்தனர். மூஸா நபி சமூகத்தில் ...
இஸ்லாமிய வாரலாறு
February, 2018
January, 2018
-
26 January
ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்நிகழ்வையொட்டி சூறா அந்நூரின் 10 வசனங்கள் அருளப்பட்டன. அந்நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே அல்லாஹ்வும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆயிஷா(ரலி) அறிவித்தார், ‘இறைத்தூதர்(ச) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு ...
-
16 January
இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]
இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு கத்தினான். தனது சித்தப்பாவை அந்த சடலம் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கொலை ...
-
16 January
இப்றாஹிம் நபியும்… நான்கு பறவைகளும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-11]
இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. “பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது! இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள். “இப்றாஹீம்! நீ நம்பவில்லையா?” என அல்லாஹ் கேட்டான். “இல்லை… இல்லை… நான் நம்புகின்றேன். இதைக் ...
-
11 January
“உஸைர் நபியும்… உயிர் பெற்ற கழுதையும்…” [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-10]
“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள்தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன். உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அழிந்து போன இந்த ஊரை அல்லாஹ் எப்படித்தான் உயிர்ப்பிப்பானோ என்று ...
-
9 January
மார்க்கத்துக்காக சகாபாப் பெண்கள் செய்த தியாகங்கள் | Thawaasi Dawa | Kuwait | 2017.
தலைப்பு: மார்க்கத்துக்காக சகாபாப் பெண்கள் செய்த தியாகங்கள் உரை: S.H.M. Ismail Salafi (B.A.Hons) இடம்: Fahaheel, Philippine Int’l School
December, 2017
-
26 December
இப்றாஹீம் நபியும்… கொழுத்த காளைக் கன்றும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-9]
இப்றாஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவர் நற்பண்புகள் நிறைந்தவர். விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது அவரின் விஷேச பண்புகளில் ஒன்றாகும். ஒருநாள் அவரது வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்து ஸலாம் கூறினர். இப்றாஹீம் நபியும் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் யார், எவர்? என்ற எந்த அறிமுகமும் அற்றவர்கள். இருப்பினும் அவர்களை அன்பாக வரவேற்று இப்றாஹீம் நபி அவர்களை அரவணைத்தார். தான் வளர்த்து வந்த ஒரு கொழுத்த காளைக் கன்றை அவர்களுக்காக சமைத்து அதை அவர்களுக்கு முன்னால் உண்பதற்காக வைத்தார். அவர்கள் உண்ணாமல் ...
-
25 December
மகாமு இப்றாஹீம் (அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 13)
மக்காவில் இருக்கும் அத்தாட்சிகளில் ஒன்றாக மகாமு இப்றாஹீமை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மகாமு இப்றாஹீமில் இருந்து நீங்கள் தொழும் இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு சூறா பகராவில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ‘(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடுமிடமாகவும், அபயமளிக்கும் இடமாகவும் நாம் ஆக்கியதை (எண்ணிப் பாருங்கள்.) நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டை தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப் போருக்காகவும் ருகூஃ, சுஜூது செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்றாஹீமுக் கும் இஸ்மாஈலுக்கும் நாம் கட்டளை யிட்டோம்.’ (2:125) மகாமு இப்றாஹீம் ...
-
25 December
யூனுஸ் நபியும்… மீனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-8]
யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது ஊரை விட்டும் வெளியேறுவதென்றால் அல்லாஹ்வின் கட்டளை வர வேண்டும். யூனுஸ் நபி தனது ...
-
18 December
சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-7]
எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த சூனியக்காரர்களுக்கும் ஒரு பொது இடத்தில் போட்டி ஏற்பாடாகியது. போட்டி நடக்கும் இடத்திற்கு மூஸா நபியும் ...