இஸ்லாமிய வாரலாறு
December, 2021
October, 2019
-
9 October
மத்ரஸாக் கல்வி! தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019.
அரபு மத்ரஸாக்கள் பற்றிய சர்ச்சைகளும், சந்தேகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டுகளைத் தாண்டி இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் கூட அடிப்படைவாதத்தையும், தீவிர வாதத்தையும் போதிக்கும் தளங்களாக சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அரபு மத்ரஸாக்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து காலத்தின் தேவைக்கு ஏற்ப தகுதியும், திறமையும் வாய்ந்த உலமாக்களை உருவாக்கத்தக்க மாற்றங்களையும் சீர்திருத்தங் களையும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மத்ரஸா – அறிமுகம்: “தரஸ” என்றால் கற்றான், படித்தான் என்பது அர்த்தமாகும். மத்ரஸா என்றால் கற்கும் ...
March, 2019
-
25 March
உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-28]
உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! இனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான். மூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் செத்து விழுந்தான். இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இது தற்செயலாக நடந்தது. ...
February, 2019
-
19 February
ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.
ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! பிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தக் காலகட்டத்தில் தான் மூஸா நபி பிறந்தார்கள். குழந்தை பிறந்த செய்தியை பிர்அவ்னின் படையினர் அறிந்தால் கழுத்தை ...
-
17 February
முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.
முதல் மனிதனின் முதல் தவறு அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை ஒப்புக் கொண்டான். அதன்பின் ஆதம் நபியிடம் அவற்றின் பெயர்களைக் கூறுமாறு கேட்டபோது அவர் ...
-
7 February
சிலைகளை உடைக்கலாமா? | Ismail Salafi | Sri Lanka | Current Issue | Article | Statue|Islam | Unmai Udayam.
இஸ்லாம் சிலை வணக்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும், எதையும் வழிப்படக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாம் சிலை வணக்கத்தைக் கண்டிக்கின்றது என்பதனால் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாமா என்றால் கூடாது என்பது இஸ்லாத்தின் பதிலாக இருக்கும். நபி(ச) அவர்கள் மக்காவில் 13 வருடங்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நபி(ச) அவர்களும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தார்கள், கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சிலை வணக்கத்திற்கு எதிராகப் போராடி நபித்தோழர்கள் பயங்கரமான ...
-
4 February
பாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.
By: Anan Ismail முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், இவர் மிக்க பேச்சாற்றல் மிக்கவ ராகவும் விளங்கினார். அதனால் ...
November, 2018
-
2 November
அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.
05. அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது! பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது. அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர். இஸ்லாம் இந்த அடிமைகள் விடயத்தில் சீர்திருத்தங்களைக் ...
October, 2018
-
16 October
பாவாத மலையும் (Adam’s Peak) இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்┇Article.
இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் இதை ‘சிறீபாத’ என அழைக்கின்றனர். இந்துக்கள் இது சிவனின் பாதச் சுவடு ...