ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன், ‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.” (62:9) இந்த வசனத்தில் குத்பாவின்பால் ...
ஆய்வுகள்
January, 2019
December, 2018
-
23 December
ஷிர்க்கும் சிலந்தி வீடும் | Article
அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான். ‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை ...
-
22 December
விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.
அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும். “உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15) இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் இருக்க வேண்டும். ...
-
19 December
அஹ்லுல் பித்ஆ | அடிப்படை அடையாளம். | Article.
நபி(ச) அவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். இந்த பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும். தனக்குப் பின்னர் இந்த உம்மத்தில் பித்அத்துக்கள் தோன்றும் என்றும் அப்போது நபி(ச) அவர்களது சுன்னாவையும் நேர்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறைகளையும் இறுகப் பற்றிப் பிடிக்கும் படியும் நபி(ச) அவர்கள் எமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள். ஒரு பித்அத்தான செயல் உருவாக்கப்பட்டால் அந்த பித்அத்தைச் செய்யும் பித்அத்வாதி சுன்னாவும் மார்க்கமும் விதித்த கடமைகளுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை அதற்குக் கொடுப்பதைக் காணலாம். பித்அத்வாதிகளின் நிலை ...
-
19 December
பீ.ஜே யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள் | தொடர் 01 | கட்டுரை.
இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பீ.ஜே. என சுருக்கமாக அழைக்கப்படுபவர். நல்ல நாவன்மையும் வாதத் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க இவர் தனது திறமைகளை இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணாகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது போதனைகளும் அதை அவர் முன்வைக்கும் விதமும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலும் குழப்பத்தையும் மன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணங்கிப் போகாத இவரது இயல்பு இவரது இயக்கத்தவர்களிடமும் குடிகொண்டுள்ளது. இதனால் இவரது இயக்க செயற்பாடுகளால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவதுடன் இவர்களது ...
-
17 December
முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்.
உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி”முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்””MUSLIMGALIN KALVI VALARCHIUM PADASALAIGALIN MUNNETRAMUM”BY ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 02/12/2018
-
5 December
அன்பான இறைவன் தண்டிக்கலாமா? | இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2
இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2 அன்பான இறைவன் தண்டிக்கலாமா? முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்| நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். அத்துடன் மறுமையில் இறைவன் ...
-
3 December
ஜும்ஆவும் அதானும் | பிக்ஹுல் இஸ்லாம் (39) | Article.
பிக்ஹுல் இஸ்லாம் (39) ஜும்ஆத் தொழுகை ஜும்ஆவும் அதானும் ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம்தான் பரவலாக இருக்கின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர், உஸ்மான்(ர) அவர்களது ஆட்சியின் ஆரம்பத்திலும் ஜும்ஆவுக்கு இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருகிய போது உஸ்மான்(ர) அவர்கள் ஜும்ஆவின் நேரம் நெருங்கிவிட்டதை நினைவூட்டுவதற்காக சந்தையில் ஜும்ஆ நேரத்திற்கு முன்னர் ஒரு அதான் கூறும் ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஜும்ஆவுக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம் ...
November, 2018
-
12 November
இஸ்லாம்; விமர்சனங்களும் விளக்கங்களும்┇கட்டுரை.
விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்: இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். 01. விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த ...
October, 2018
-
7 October
ஜூம்ஆத் தொழுகை
பிக்ஹுல் இஸ்லாம் – 39 (ஆகஸ்ட் – 2018) …………………………………………………. ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜூம்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜூம்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜூம்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா இணைந்தார்கள். உலகம் ...