எமது தாய்த் திருநாடு சுதந்திரம் பெற்று 2016.02.04 ஆம் திகதியுடன் 68 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பல நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைவாழ் மக்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறலாம். சில நாடுகள் வாட்டி வதைக்கும் வெப்ப பூமிகளாகும். மற்றும் பல நாடுகள் நடுங்க வைக்கும் குளிர் பிரதேசங்களாகும். இலங்கை மத்திமமான கால சூழலைக் கொண்ட எழில் கொஞ்சும் பூமியாகும். சில நாடுகளில் இரவு நீண்டதாகவும் மற்றும் சிலவற்றில் பகல் நீண்டதாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால், இலங்கையில் இரவு, பகல் என்பன நடுத்தரமானவையாக அமைந்திருப்பதை ...
அரசியல்
February, 2016
-
19 February
மாடறுப்புத் தடைச்சட்டம் ஏற்படுத்தும் மறுவிளைவுகள்
களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட அவர் இப்படியொரு வார்த்தையை வெளியிடவில்லை. ...
January, 2016
-
11 January
தாலூத்தும் ஜாலூத்தும்
அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் தாலூத்தும் ஜாலூத்தும் ‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்” எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?” எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் போராடாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்தது?” எனக் கூறினர். ஆனால், அவர்கள் மீது போர் விதியாக்கப்பட்டபோது அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர (ஏனையோர்) ...
-
4 January
மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்!
மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்! இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ” – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் கற்பித்தலின் அடிப்படை அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, இஸ்லாம் அறிவியல் எழுச்சி மூலமாக ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பும் ...
December, 2015
-
23 December
இஸ்லாத்திற்கு எதிரான சதிகள் – ஜும்ஆ உரை mp3 (18.12.2015)
[sc_embed_player_template1 fileurl=”http://files.qurankalvi.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.mp3″] Audio mp3 (Download)
-
9 December
பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்
பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும் பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ISIS தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலின் மூலம் ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன, குர்ஆன் எரிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘டொனால்ட் ட்ரம்ப்” இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தனது முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி ஆதரவு தேட முற்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக ஐரோப்பாவில் ...
November, 2015
-
17 November
மாறப் போகும் உலக அரசியல்
எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெற்று வருவதுண்டு. உலக நடப்புக்களை அவதானிக்கும் போது ஒரு அரசியல் மாற்றத்திற்கான அத்திவாரங்கள் இடப்பட்டுவிட்டனவா என சிந்திக்க வேண்டியுள்ளது. நபி(ஸல்) அவர்களது காலத்தில் உரோம, பாரசீகப் பேரரசுகள் உலக வல்லரசுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஈற்றில் இரு பெரும் வல்லரசுகளும் இஸ்லாத்திடம் சரணடைந்தன. இவ்வாறே சென்ற நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா என்பன இரு பெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்தன. உலக நாடுகள், அமெரிக்க ஆதரவு அணி, ரஷ்ய ஆதரவு அணி, அணி சேரா நாடுகள் என பிரிந்து செயற்பட்டன. ...
October, 2015
-
14 October
மக்காவிபத்தை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை?
மக்காவில் கிரேன் விழுந்த விபத்தில் சுமார் 107 பேர் பலியானதோடு 238 பேர் காயமடைந்துள்ளனர். பொதுவாகவே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை வைப்பதால் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிவிட்டுப் போய்விடுவர். இம்முறை மக்கா விபத்தை ஏராளமான மக்கள் இணையதளங்களினூடாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் கண்ணுற்றனர். இதனால் சில மாற்று மதத்தவர்கள் அபயமளிக்கப்பட்ட பூமியான மக்கா பூமியில் அவ்விபத்தை ஏன் அல்லாஹ்வினால் தடுக்க முடியாமல் போய்விட்டது? என்ற தோரணையில் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் சில மாற்று மத சகோதரர்கள் துக்கம் விசாரிப்பது போல் ...
September, 2015
-
22 September
இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்
அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது போன்ற உணர்வை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். இறுகிப் போன உள்ளங்கள் இளகி நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்களின் மனதை ஆட்கொண்டிருந்த அச்ச உணர்வுகள் அகல ஆரம்பித்துள்ளன. ...
February, 2015
-
3 February
தெரிந்த பேயை விட்டு விட்டு தெரியாத தேவதையை அரவணைத்த இலங்கை மக்கள்
வித்தியாசமான ஒரு தேர்தலையும், தேர்தல் முடிவையும் இலங்கை மக்கள் சந்தித்துள்ளனர். இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அதிகபட்சமாக இரண்டு முறை பதவி வகித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மூன்றாவது முறையும் பதவி வகிப்பதற்காகப் போட்டியிட்டார். அவர் பதவியில் இருக்கும் போதே, இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும் போதே இந்தத் தேர்தல் நடந்தது. இலங்கையில் ஜனாதிபதியொருவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது இதுவே முதல் தடவையாகும். இவ்வாறு இந்தத் தேர்தலில் வித்தியாசமான பல அம்சங்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதியுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனாவுடன் ஒப்பிடும் போது முன்னாள் ஜனாதிபதியே ...