நாம் கற்ற மஃஹத் நமக்கு மார்க்கக் கல்வியையும் வாழ்கை நெறிமுறைகளையும் கற்றுத் தந்தது .நமது வகுப்பறைக்கும் விடுதிக்கும் ஒன்னறைக் கிலோ மீட்டர் தூரம் இருக்கும். எமது அறையில் சுமார் 13 பேர் இருந்தோம். கட்டில்கள் இல்லாத காலம் .ஒரு நாள் நாம் லைட்டை அனைக்காமல் வகுப்பறைக்குச் சென்றுவிட்டோம் .முதலாம் பாடம் நடந்து கொண்டிருந்தது. எமது அன்புக்கும் மரியாதைக்குமுறிய எமது அதிபர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் .அப்போது விடுதி ஆசிரியர் அப்துஸ் ஸலாம் சேர் வகுப்பறைக்கு வந்தார் .இவர் மீரான் மவ்லவியின் சகோதரர். இருவரும் மரணித்து விட்டனர். அவ்விருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக
விடுதி ஆசிரியர் அதிபரிடம் ஏதோ பேசினார். பின்னர் எங்களிடம் வந்து நீங்கள் விளக்கை அனைக்காமல் வந்து விட்டீர்கள்; அதனால் அனைவரும் வரிசையாகச் சென்று விளக்கை அனைத்து விட்டு வரிசையாக வாருங்கள் .”என்றார். நாம் 13 பேரும் வரிசையாகச் சென்று விளக்கை அனைத்து விட்டு வந்தோம் .அதன் பின்னர் விடுதியில் இருந்து வரும்போது இருப்பவர்களிடம் மறந்துவிடாமல் விளக்கை அனைத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டே வருவோம் .அன்று விடுதியாசிரியர் அவரே விளக்கை அனைத்திருந்தால் அது எமக்குப் பாடமாக அமைந்திருக்காது .அவர் கற்றுத் தந்த பாடத்தால் நூற்றுக்கண்கான மாணவர்கள் பயணிக்கும் பாடசாலை வீதியில் கூட நான் அனைப்பதற்காக சில விளக்குகள் எரிந்து கொண்டேயிருக்கும் .பிற்பட்ட காலத்தில் விடுதியும் வகுப்பறையும் ஒரே இடத்திற்கு மாறியது .சிலவேலை விடுதில் மின்விளக்குகளும் விசிரிகளும் ஓயாமல் இயங்கிக் ஙொண்டிருப்பதைக் கானும் போது இச்சம்பவத்தை நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்கள் நிர்வாகிகள் விடுதி ஆசிரியர்கள் சமையலறை ஊழியர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக
அன்புடன் இஸ்மாயில் ஸலபி