வித்தியாசமான ஒரு தேர்தலையும், தேர்தல் முடிவையும் இலங்கை மக்கள் சந்தித்துள்ளனர். இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அதிகபட்சமாக இரண்டு முறை பதவி வகித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மூன்றாவது முறையும் பதவி வகிப்பதற்காகப் போட்டியிட்டார். அவர் பதவியில் இருக்கும் போதே, இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும் போதே இந்தத் தேர்தல் நடந்தது. இலங்கையில் ஜனாதிபதியொருவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது இதுவே முதல் தடவையாகும். இவ்வாறு இந்தத் தேர்தலில் வித்தியாசமான பல அம்சங்கள் உள்ளன.
முன்னாள் ஜனாதிபதியுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனாவுடன் ஒப்பிடும் போது முன்னாள் ஜனாதிபதியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. முன்னாள் ஜனாதிபதி இரண்டாம் துட்டகைமுனுவாகப் பார்க்கப்பட்டவர்É பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை மீட்டவர்É ஆளுமையும், ஆற்றலும், துணிச்சலும் மிக்கவர். இத்தனைக்கும் மேலாக பதவி, அதிகாரம், பணம், மீடியா, செல்வாக்கு என அனைத்தும் அவர் பக்கம் இருந்தன. அவர் ஏராளமான இலவசங்களையும் அன்பளிப்புக்களையும் அள்ளி வீசியும், கோடிக்கணக்கான பணத்தையும் செலவழித்தும், பல்லாயிரக் கணக்கான சுவரொட்டிகள் ஒட்டியும் பதாகைகள் தொங்கவிட்டும், இனவாதம் பேசியும் அவரால் வெற்றி பெற முடியாது போனது.
முன்னாள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தைத் தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே ஆரம்பித்துவிட்டார். அவர் இறுதியாகப் போட்ட வரவு-செலவு திட்டம் கூட ஒரு தேர்தல் வரவு-செலவுத் திட்டம்தான். அப்படியிருந்தும் குறுகிய கால பிரச்சாரத்தில் மைத்திரிபால சிரிசேன எப்படி வெற்றியீட்டினார்?
முன்னாள் ஜனாதிபதி தனது உரைகளில் என்னை எல்லோருக்கும் தெரியும்É என்னோடு போட்டி போடுபவரை உங்களுக்குத் தெரியாதுÉ ‘தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் நல்லம்’ என்பார்கள். எனவே, தெரியாத தேவதையை விட்டு விட்டு தெரிந்த பேயை ஆதரியுங்கள் என்றார். அவர் தன்னைப் பேய் என்றது உண்மையோ பொய்யோ மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இருந்தாலும் தான் ஒரு தேவதை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதிக்கு உண்டு. தெரிந்த பேயை விட்டுவிட்டு தெரியாத தேவதையை இலங்கை மக்கள் ஏன் அரவணைத்தார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது ஆளும் தரப்புக்கு அவசியமாகும். பொது மக்களுக்கும் அது பயனளிக்கும்.
மைத்திரியின் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை விட மகிந்தவின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதுதான் யதார்த்தத்தை உணர உதவி செய்யும். உண்மையில் மகிந்தவின் தோல்விக்கான காரணங்களை இரண்டாக வகுத்து நோக்கலாம்.
1. மகிந்த மற்றும் அவரது குடும்பத்தவரின் அதிகார துஷ;பிரயோகங்கள்.
2. அரசின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்களின் சிறுபான்மை விரோத செயற்பாடுகள்.
இந்த இரண்டு அம்சங்;களும் மகிந்தவின் தோல்விக்கும் மைத்திரியின் வெற்றிக்கும் வழிவகுத்தன என்று கூறலாம்.
அதிகார துஷ்பிரயோகங்கள்:
‘ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் செய்ய முடியும்’ என்று அரசியல் அறிஞர்கள் சொல்லும் அளவுக்கு அதி உச்சகட்ட அதிகாரத்தை இலங்கையின் அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. ஜே.ஆர். வகுத்த இந்த நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதிக்கான உச்சகட்ட அதிகாரத்தை அதிகமாகவும் முழுமையாகவும் பயன் படுத்திக் கொண்டவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த கணிக்கப்படுகின்றார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிமுறை மாற்றப்பட வேண்டும் என கடந்த காலங்களிலும் பலராலும் பேசப்பட்ட போதிலும் மகிந்த அதை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் அந்தக் கோஷம் வலுப்பெற ஆரம்பித்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா மீது தொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தங்கள் தான் பொறுப்பை மகிந்தவுக்கு வழங்கியதைத் தான் செய்த தவறாக அவரை உணரச் செய்தது. எனவே, தானே முன்னின்று மகிந்தவை பதவி கவிழ்க்க வேண்டும் என அவர் திட்டமிட்டார். எனவே, மகிந்தவிற்கு எதிராக வகுக்கப்பட்ட வியூகத்தின் முக்கிய சூத்திரதாரியாக அவர் திகழ்கின்றார். இந்த வகையில் மகிந்தவின் அதிகார துஷ;பிரயோகங்கள் சில எதிரிகளை அவருக்குள்ளிருந்தே உருவாக்கி வைத்திருந்தது.
சரத் பொன்சேகா:
யுத்த வெற்றியின் மிகப் பெரிய பங்காளியான சரத்பொன்சேகா புறந்தள்ளப்பட்டார். அவர் சென்ற முறை பொது வேட்பாளராப் போட்டியிட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கைது செய்யப்பட்டார். நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்கப் போராடிய ஒரு தளபதி சிறைவாசம் சென்றார். அவர் வஞ்சம் தீர்க்கப்பட்டார். இதனால் நிரந்தர எதிரி ஒருவரை மகிந்த அரசு ஏற்படுத்திக் கொண்டது.
துஏPஇ ருNP:
கட்சி ரீதியாக துஏPஇ ருNP என்பன மகிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மகிந்த ஆட்சியில் ஊழல்கள், ஆடம்பரங்கள் என்பன துஏPஇ ருNPயின் சரிவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. ஊழல்கள், மோசடிகள், அதிகார துஷ;பிரயோகங்கள் காரணமாக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் மீது அதிருப்தி கொள்ளத் துவங்கியிருந்தனர். கடந்த பல தேர்தல்களில் அரசின் வாக்கு வங்கி சரிந்து வருவது தெட்டத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. குறிப்பாக, ஊவா தேர்தல் முடிவுகள் அரசு சரிந்து வருவதைத் தெளிவாகவே உணர்த்தியது. அதே வேளை, முயற்சித்தால் மகிந்தவைத் தோல்வியின் பக்கம் தள்ள முடியும் என்ற தெம்பையும் எதிர்க்கட்சிகளுக்குக் கொடுத்தது.
அமைச்சர்கள்:
மகிந்த அரசில் அங்கம் வகித்த பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் களும் கூட நொந்து நூலாகி வெந்து வெதும்பிக் கொண்டிருந்தனர். ஜனாதிபதியின் தம்பிமார்களின் அதிகரித்த ஆதிக்கம், நேற்று முளைத்த நாமல் செலுத்தும் செல்வாக்கு, முக்கிய அமைச்சர்கள் கூட சுயமாக முடிவெடுக்க முடியாத நிலை என்பவற்றால் அவர்களும் அதிருப்தியடைந்திருந்தனர்.
மூன்றாம் முறையாக இவர் போட்டியிடுவார். அதன் பின் இவரது தம்பிகளோ, பிள்ளைகளோ போட்டியிடுவார்கள் என்றால் அடுத்தடுத்த கட்டத்திலிருக்கும் எமது நிலை என்ன என அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். எனவே, அவர்கள் அரசிலிருந்து வெளியேறினர்.
இவ்வாறு மகிந்த அரசின் அதிகார துஷ;பிரயோகங்கள் சிங்கள மக்களின் அதிருப்திகளை ஒன்று சேர்த்து வந்தன.
இனவாத செயற்பாடுகள்:
உள்ளுக்குள் புகைந்து கொண்டி ருப்பதைப் புரியாத மகிந்த அரசு தனக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லைÉ சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் மூலம் பெரும்பான்மை மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கலாம் என கனவு கண்டது. ஆனால், பெரும்பான்மை வாக்கு வங்கியை அவரது குடும்பத்தினரது அதிகார துஷ;பிரயோகங்கள் சிதைத்து வருவதை அவர் புரியாமலேயே பொதுபலசேனா போன்ற இனவாத சக்திகளைப் பயன்படுத்தி ஐம்பது இலட்சம் வாக்குகளைப் பெறலாம். அந்த ஐம்பது இலட்சத்துடன் ஒப்பிடும் போது தமிழ் முஸ்லிம் வாக்குகள் துச்சமே எனக் கணக்குப் போட்டார். அவரது இனவாத செயற்பாடுகளால் தமிழ்-முஸ்லிம் வாக்குகளையும் இழந்தார். இதுவே இலங்கையில் முக்கியமான ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது எனலாம்.
இலங்கையில் நடந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது சிறுபான்மை சமூகத்தைப் புறக்கணித்தவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளதை அவதானிக்கலாம்.
இலங்கையில் ருNP – ளுடுகுP ஆகிய கட்சிகள் சம அளவிலான சிங்கள வாக்கு வங்கிகளைக் கொண்டிருந்தன. சிறுபான்மை மக்கள் எந்தப் பக்கம் சாய்வார்களோ அந்தக் பக்கமே வெல்லும் என்ற நிலைதான் இலங்கை அரசியலில் நிலவி வந்தது. இதனால் சிறுபான்மை மக்களுக்கு ஒருவித அரசியல் மரியாதை நிலவி வந்தது.
1988 இல் நடந்த தேர்தலில் சிரிமாவுடன் செய்த ஒப்பந்தத்தை அஷ;ரப் முறித்துக் கொண்டு பிரேமதாஸவுக்கு ஆதரவு வங்கினார். இரண்டு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரேமதாஸ வெற்றி பெற்றார்.
அதன் பின், 09.11.1994 இல் நடந்த தேர்தலில் சந்திரிக்கா அலை வீசியது. பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த னு.P. விஜேதுங்க சிறுபான்மை மக்களை கொடிகளுக்கு ஒப்பிட்டுப் பேசினார். அவர்கள் மரங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்றார். சிறுபான்மை வாக்குகள் மட்டுமன்றி ஆட்சி மாற்றத்தை விரும்பிய பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் சந்திரிக்கா இருபது இலட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் நடந்த தேர்தலிலும் சந்திரிக்கா ரணிலுக்கு எதிராகப் போட்டியிட்டு ஏழு இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நாட்டில் இனவாத செயற்பாடுகள் சூடுபிடித்தன. முஸ்லிம்களுக்கு எதிராகப் பல கலவரங்கள் வெடித்தன. மாவனல்லை கலவரத்தின் காரணத்தினால் ஏற்பட்ட முரண்பாட்டால் முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்து ரணில் பிரதமரானார்.
இந்த மாற்றம் தேர்தலில் செல்வாக்கைச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தமிழ் அரசியல் தலைமைகளுக்குக் கூட ஏற்படுத்தியது எனலாம்.
ரணிலின் காலத்தில் அரசு புலிகளுக்கிடையே சமதான ஒப்பந்தம் நீடித்த வேளையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல அராஜகங்களை புலிகள் கட்டவிழ்த்துவிட்டாலும் அரசு மௌனம் காத்தது. முஸ்லிம்கள் ரணில் மீது வெறுப்படைந்தனர். அடுத்த தேர்தலில் (17.11.2005) மகிந்தவுக்கு முஸ்லிம் வாக்குகள் ஓரளவு கிடைக்க இது வழி செய்தது.
26.01.2010 இல் நடந்த தேர்தலில் யுத்த வெற்றி காரணமாக மகிந்த அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் சிறுபான்மை வாக்குகள் இல்லாமலேயே பெரும்பான்மை மக்களின் பலத்துடனேயே ஆட்சி அமைக்கலாம் என்ற மாயை உருவாக்கப்பட்டது. மகிந்த அரசு அதிகார துஷ;பிரயோகங்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இந்த நிலை கொஞ்சம் நீடித்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மை வாக்கு பலத்தில் நம்பிக்கை வைத்து சிறுபான்மை வாக்குகளைத் துச்சமென மதித்து செயற்பட்டமை மகிந்த விட்ட பெரும் தவறாகும். இந்த சந்தர்ப்பத்தில் புதிய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து பாடங்களைக் கற்று தனது ஆட்சியை அமைத்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் நாட்டு நலனில் அக்கறை உள்ள சக்திகள் அனைத்தும் தற்போதைய ஜனாதிபதியான மைத்திரி பக்கம் சாய்ந்துள்ளனர். இந்தக் கூட்டமைப்பு சிதைந்துவிடாமல் கட்டிக் காப்பதும், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தைப் பேணுவதும் நாட்டுத் தலைமையின் தலையாய பொறுப்பாகும்.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. இந்தத் தேர்தல் கொள்கை ரீதியில் மக்களை ஒன்றிணைத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து ஊழலும் அதிகார துஷ;பிரயோகமும் நிறைந்த, இனவாத, மதவாத அரசைத் தோற்கடித்தல் என்ற நாட்டு நலன் மிக்க கொள்கையில் என்றுமில்லாதவாறு முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர்.
அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இதை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பொது மக்களும் புரிந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, இந்தத் தேர்தல் வெற்றிக்கு முற்று முழுதாக சிறுபான்மையினராகிய நாம்தான் காரணம் என்ற தோரணையில் நடந்து கொள்ளக் கூடாது. இது இனவாதத் தீயை மூட்டிவிடும். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் கட்சி பேதமின்றி இந்த வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர். அடுத்த பொதுத் தேர்தலில் இனவாதம் கக்கப்படலாம். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி கூட தனது தோல்விக்கு சிறுபான்மை மக்களே காரணம் எனக் கூறி பெரும்பான்மை மக்களின் அனுதாப அலையைப் பெற முற்பட்டமை கவனிக்கத்தக்கதாகும்.
மழை நின்றாலும் தூறல் நிற்காததைப் போன்று தூண்டிவிடப்பட்ட இனவாத துவேஷ சிந்தனையின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். எனவே, சமூக நல்லிணக்கத்திற்காக நாம் நிறையவே பாடுபட வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் மீது தப்பெண்ணத்தை ஊட்டத்தக்க சில அரசியல் முன்னெடுப்புக்கள், கோரிக்கைகள் என்பவற்றை நாம் தவிர்ப்பது மிகவும் பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.
மகிந்த இனவாதம் மட்டும் பேசியிருந்தால் ஒரு வேளை வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், வாயைப் பிளக்க வைக்கும் ஊழல்களும் துஷ;பிரயோகங்களும் இணைந்தே அவருக்குத் தோல்வியைத் தேடிக் கொடுத்துள்ளன. ஊழல் இல்லாது அரசியல் அராஜகங்கள் இல்லாது அபிவிருத்திப் பணிகளை முறையாகச் செய்து கொண்டு ஒரு தலைவன் இனவாதம் பேசினால் அதைத் தோற்கடிப்பது மிக மிகக் கடினமாகும். எனவே, உணர்ச்சிவசப்படும் இனவாதத்தை விட அறிவு ரீதியாக முன்னெடுக்கப்படும் இனவாதம் ஆபத்தானது. அதற்கு நாம் இடமளிக்காத விதத்தில் தேசிய நீரோட்டத்தில் தனித்து நிற்காமல் பல விடயங்களில் அனுசரித்து செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் புத்தி ஜீவிகளும் நிதானமாக சிந்தித்து மக்களை வழிநடத்த வேண்டியுள்ளது.
புதிய அரசினால் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாத கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தலையிடியைக் கொடுக்காது பக்க பலமாக இருந்து பலப்படுத்தி அதனைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் எதிர்காலம் ஒளிமயமானதாக விளங்க நாம் அனைவரும் உறுதிபூண்டு உழைப்பதுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் புரிவோமாக!