சிரியாவில் கடந்த சில வருடங்களாகவே பெரும் மனித அவலங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கற்பழிப்புக்கள், கூட்டுப் படுகொலைகள், சிறுவர் மற்றும் சிறுமியர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள், இரசாயன ஆயுதப் பாவனை என ஈனத்தனமான கொடூரங்களை ஆஸாத்தின் இராணுவ மிருகங்கள் நிகழ்த்தி வருகின்றன.
இந்தக் கொடூரங்களின் விளைவால் பாரிய உள்நாட்டுப் போர் வெடித்து சிரியா சிதறிப் போயுள்ளது. சிரியாவின் சிறுவர்கள் மீது இரசாயனம் பாவிக்கப்பட்ட போது அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கொஞ்சம் கொதித்து விட்டு அப்படியே அடங்கிப் போயின. சிரியாவின் கொடூரங்களுக்குப் பின்னால் ரஷ;யா, ஈரான் போன்ற நாடுகளின் பக்க பலம் சிரிய இராணுவத்திற்கு உண்டு!
சிரியாவின் கொடூர ஷPஆ ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அங்கு அமெரிக்க எதிர்ப்புணர்வு கொண்ட கிளர்ச்சிக் குழுக்களின் கைகள் ஓங்கிவிடும் என்பதால் அமெரிக்காவும் ஐ.நா வும் அங்கு நடப்பதை கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இஸ்லாமிய தேசமெங்கும் பற்றி எரிந்து கொண்டிருப்பதை நாம் இன்று அவதானிக்கலாம். உள்ளே எரிய வெளியிலிருந்து யாரோ தீ மூட்டிக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மை பளிச்செனத் தெளிவாகத் தெரிகின்றது.
அமெரிக்காவுடன் நற்புறவு கொண்டுள்ள சவுதி, குவைட், கடார், டுபாய்.. போன்ற நாடுகள் நலமாகவும் வளமாகவும் இருக்கும் போது அமெரிக்காவுடன் பகைத்துக் கொண்டிருந்த நாடுகள் பற்றி எரிகின்றன என்றால் தீமூட்டப்படுகின்றது என்பது வெளிப்படையாகப் புரியக்கூடியதுதானே!
இஸ்ரேல் நாடு செழிப்புடன் இருக்கும் போது அதைச் சூழ உள்ள முஸ்லிம் நாடுகள் மட்டுமே சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன.
போலியாக உருவாக்கப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலைச் சொல்லி ஆப்கான் அழிக்கப்பட்டது. இரசாயன ஆயுதம் இருப்பதாகச் சொல்லி பண்டைய நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த ஈராக் சிதைக்கப்பட்டது. ஷPஆ, சுன்னி பிரிவும் குர்திஷ; பிளவும் உருவாக்கப்பட்டது.
இன்னும் யூத கைக் கூலிகள் தமது ஷPஆ ஏஜென்டுகள் மூலம் யெமன், சிரியா தேசங்களைச் சிதைத்து வருகின்றனர். அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் பூமிகளில் புரட்சிச் சுறாவளிகள் உருவாக்கப்பட்டன. இதனால் முஸ்லிம் நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்களும், ஆட்சி மாற்றங்களும் கூட ஏற்பட்டன. இந்த அறபு வசந்தங்களால் நடந்தது என்ன?
பல்லாயிரம் உயிர் பலிகள், பலகோடிச் சொத்துக்கள் அழிந்து போயின. பெண்கள், சிறுவர்கள் பலரின் உயிர்கள் கூட பலியாகின. அமைதி தொலைந்து போயின. செல்வந்த தேச முஸ்லிம்கள் அகதிகளாயினர். ஆட்சியில் அமர்ந்தவர்கள் மாறினர். ஆட்சி முறைகள் மாறவில்லை. அரபு வசந்தம் வருவதற்கு முன்பிருந்ததை விட தேசங்களின் அமைதி, நிர்வாக ஒழுங்குகள், பொருளாதாரம் அனைத்தும் சிதைந்து போயிற்று!
இதற்கெல்லாம் உண்மையான காரணம் சத்திய மார்க்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் எமது நிலைப்பாடாகும். ஆட்சியாளன் கெட்டவனாக இருந்தாலும் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. முஃதஸிலா ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் அளவுக்கு மக்கள் செல்வாக்கிருந்தும் இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தல் என்ற வழியின் ஊடாகவே ஆரம்ப கால இஸ்லாமிய எதிரிகளும் முஸ்லிம்களுக்குள் உட்பூசல்களை ஏற்படுத்தினர். நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற பேரில் உஸ்மான்(வ) அவர்களுக்கெதிராகக் கிளர்ச்சி செய்து அவர்களைப் படுகொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து இதே பாணியில்தான் கவாரிஜ்கள் நடந்து கொண்டனர். இந்த அடிப்படையில் போலி இஸ்லாமிய வாதத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி முஸ்லிம் நாடுகளுக்குள் பிளவுகளும் புரட்சிகளும் உண்டாக்கப்பட்டு வருகின்றன.
இதே அடிப்படையில் ஷPஆ-சுன்னா பிரச்சினையையும் முஸ்லிம் நாடுகளுக்குள் மூட்டி விடுவதற்கு சாதகமான சாதனமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஷPஆக்கள் வழிகேடர்கள் என்பதில் எள்ளின் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால், எமக்கு மத்தியில் இருக்கும் இந்த கொள்கை முரண்பாட்டை வைத்து எதிரிகள் எம்மைக் கருவருக்க இடம் கொடுக்காத விதத்தில் முஸ்லிம் நாடுகள் இந்தப் பிரச்சினையைக் கையாளும் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறே முஸ்லிம்களுக்கு மத்தியில் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி அவர்களினூடாக முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் வழிவகைகளையும் எதிரிகள் செய்து வருகின்றனர். இத்தகைய தீவிரவாதக் குழுக்களை வைத்து இஸ்லாத்தைத் தீவிரவாதமாகவும், பயங்கரவாதமாகவும் மனிதநேயமற்ற மிருகங்களைக் கொண்ட மதமாகவும் எதிரிகள் சித்தரித்து வருகின்றனர். இது குறித்தும் முஸ்லிம் அரசியல் உலகு கவனம் செலுத்த வேண்டும்.
இதே வேளை, அண்மையில் சிரியாவில் ஏற்பட்ட அவலத்தினால் சிரிய மக்கள் பெருமளவில் அகதிகளாக தஞ்சம் தேடி அலைகின்றனர். சிரியச் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணித்த காட்சி முழு உலகின் கவனத்தையும் சிரிய அகதிகள் பக்கம் திருப்பியது. இதனால் பல ஐரோப்பிய நாடுகள் சிரிய மக்களுக்கு தஞ்சம் அளிக்கத் தயாராகின. ஒவ்வொரு திருச்சபையும் ஒரு சிரியக் குடும்பத்தைப் பொறுப்பேற்க வேண்டும் என ‘போப்’ அறிவித்தார்.
உண்மையில் மனித நேயத்தின் அடிப்படையில் சிரிய அகதிகள் விடயத்தில் அக்கறை செலுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர். இருப்பினும், கிறிஸ்தவ உலகு இதனை மதமாற்றத்திற்கான நல்ல சந்தர்ப்பமாகப் பார்ப்பது போன்றே தெரிகின்றது!
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. பெரும்பாலும் எல்லா மதங்களிலிருந்தும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். இருப்பினும் இஸ்லாத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு மிகஅரிதாகவே உள்ளது.
எனவே, சிரிய அகதிகள் மூலமாக இந்த நிலையை மாற்றி பெருமளவான முஸ்லிம்களை மதம் மாறும் மனநிலைக்குக் கொண்டு வர கிறிஸ்தவ உலகு விரும்புகின்றது. எனவேதான் இது விடயத்தில் கூடுதல் அக்கறையை அது காட்டி வருகின்றது.
பலஸ்தீனில் பல்லாயிரம் உயிர்கள் தினம் தினம் பலியிடப்படுகின்றன. இன்னும் அமெரிக்கா தொடுத்த அக்கிரமமான ஈராக், ஆப்கான் போர்களின் மூலம் பல இலட்சம் உயிர்கள் பலியாகியுள்ளன. இதன் போது வராத பாசம் இப்போது மட்டும் (அகதிகளாக வெளியேறும் முஸ்லிம்கள் மீது) வந்துள்ளது என்றால் அதன் பின்னணி ஆராயப்பட வேண்டியதே!
இஸ்லாமிய உலகு தேசியவாத சிந்தனையிலிருந்து விடுபட வேண்டியுள்ளது. இஸ்லாமிய அழைப்புக்கள், குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் நின்று தமது பிரச்சாரத்தை வடிவமைக்க வேண்டியுள்ளது. ‘ஜிஹாத்’ எனும் இஸ்லாத்தின் போதனையைத் தவறாக போதிப்பதையும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அதைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்வது இஸ்லாமிய தஃவாவின் அணுகுமுறையல்ல என்ற உண்மை உணரப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளின் தலைமைகள் பலப்படுத்தப்பட வேண்டும். தற்போதிருக்கும் சவூதி, துருக்கி தலைவர்கள் இஸ்லாமிய உலகிற்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர். இந்தத் தலைமைகளை பலவீனப்படுத்தவும் எதிரிகள் முனையக் கூடும்! இருக்கும் தலைமைகளை பலவீனப்படுத்துவதும் எதிரிகள் அன்று தொட்டு இன்று வரை கடைப்பிடித்து வரும் வழிமுறைகளில் ஒன்று என்பதும் உணரப்பட வேண்டும்.
இஸ்லாத்தை உரிய முறையில் புரிந்து அதன் வழி நடப்பதே நலிவடைந்து செல்லும் இஸ்லாமிய உம்மத்திற்கு பலமாகவும், உரமாகவும் அமையும்! எனவே, நாம் அனைவரும் இந்த உண்மையை உணர்ந்து செயற்பட முனைவோமாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து பாதுகாத்து
ஈருக வெற்றியை தந்து அருள் புரிவானாக!