அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மத குருவும், சினிமா தயாரிப்பாளரும் இணைந்து வெளியிட்ட ”Innocence of Muslims” ‘ என்ற சினிமா இன்று உலக முஸ்லிம்களையே குமுறச் செய்துள்ளது. இந்த சினிமாவின் ஒரு காட்சியைக் கண்டால் கூட உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ள முஸ்லிமும் எரிமலையாய் குமுறவே செய்வான். அமெரிக்காவினதும் கிறிஸ்தவ உலகினதும் விஸமத்தனத்தின் உச்சக் கட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
நபியவர்களுக்கு உருவம் கொடுப்பதில்லை என்ற கொள்கையைக் கோடான கோடி முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளாக உறுதியுடன் பேணி வருகின்றனர். இதில் ஒரு முஸ்லிம்கூட மாற்றுக் கருத்தில் இல்லை. இப்படி இருக்கும் போது இந்த மரபை உடைக்கும் விதத்தில் நபியவர்களைக் கேலிச் சித்திரம் வரைவதும் அவர்களுக்கு உருவம் கொடுப்பதும் அப்பட்டமான வரம்பு மீறலாகும் என்பதை ஊடகங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நபிய(ஸல்) அவர்களுக்கு அழகிய உருவம் கொடுப்பதைக் கூட, அவர்கள் போன்று நல்ல விதமாக ஒருவர் நடிப்பதைக் கூட முஸ்லிம் உலகின் ஒரு குடிமகன் கூட ஏற்றுக் கொள்ளமாட்டான்.
இவ்வாறிருக்கையில் சரிந்துவிட்ட ஒபாமாவின் அரசியல் செல்வாக்கைச் சரி செய்யும் நோக்கத்தில் நபி(ஸல்) அவர்களை கோமாளியாகவும், காமுகனாகவும் இரத்த வெறிபிடித்து அலைபவராகவும், முஸ்லிம்களின் அன்பு அன்னையர்களான நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் விதத்திலும், நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் விதத்திலும் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பராக் ஒபாமாவும், அமெரிக்கத் தூதர்களும் உடனே இந்தத் திரைப்படத்துக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தால், அமெரிக்கா இந்த சினிமாவைத் தடை செய்திருந்தால் முஸ்லிம்களது குமுறல் ஓரளவு குறைந்திருக்கும். ஆனால் இதுவரை ஒபாமாவோ அமெரிக்கத் தூதர்களோ திரைப்படத்தைக் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌன அங்கீகாரம் அளித்தனர். அவர்களும் இதை சரிகாண்கின்றார்கள் என்பதையே இது உணர்த்துகின்றது. ஆர்ப்பாட்டங்கள் கட்டுக்கடங்காமல் போகவே இப்போது மௌனம் களைத்துள்ளனர்
இந்தத் திரைப்படத்தையும் அதைத் தயாரித்தவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் தூதர்களின் நிலைப்பாட்டையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதே வேளை, முஸ்லிம் நாடுகள் ஒன்றினைந்து இந்தக் கண்டன நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்றும் முஸ்லிம் நாடுகள் அமெரிக்க உற்பத்திகளை முடிந்தளவு தவிர்ப்பதன் மூலமாகவும், அமெரிக்கத் தூதர்களை அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்புவதன் மூலமாகவும் தமது கண்டனத்தை வீரியத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றோம். சாபத்துக்குரிய அமெரிக்காவின் இந்தச் செயற்பாடு நிச்சயம் அதற்கு அழிவையே ஏற்படுத்தும். இந்த அழிவிற்காக முஸ்லிம்கள் அனைரைம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்! இந்த திரைப்படத்தைத் தடை செய்துள்ள இலங்கை புத்த சாசன அமைச்சையும் இலங்கை அரசையும் நன்றி கலந்த மனதுடன் பாராட்டுகின்றோம்