4935 – حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالَ: أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: «ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ البَقْلُ، لَيْسَ مِنَ الإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى، إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الخَلْقُ يَوْمَ القِيَامَةِ»
- அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்
‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸுர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலம்க் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலம்க் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலம்க்கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், ‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள்.
மேற்படி நபிமொழி புகாரி முஸ்லிம் அபுதாவுத் போன்ற பல ஹதீஸ் நூற்களிலும் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அந்த எழும்புப் பகுதி கீழ் உள்ள படத்தின் கீழ் பகுதியாகும்.
இந்த எழும்பு பற்றிய வீடியோவைப் பார்க்க விரும்புபவர்கள் கீழ் கானும் இணைப்புக்குச் செல்லலாம்.
http://www.youtube.com/watch?v=MvfkivDn3ok
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு (உள்வால் எலும்பு (coccyx bone) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி) அழியாது என இந்த நபிமொழி கூறுகின்றது. இதனை இன்றைய விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ‘ஹான்ஸ் ஸ்பீமேன்’ இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடியவில்லை. மனித உடலில் உள்ள அழிக்க முடியாத பகுதி இது என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார். இதற்காக அவர் நோபல் பரிசினையும் பெற்றார்.
“அஜபுத்தனப்“ எனப்படும் இந்த அழியாத மனித எழும்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் அரபு மொழியில் செய்யப்பட்ட ஆய்வுகளை அறிய விரும்புபவர்கள் கீழ் கானும் இணையங்களை நாடலாம்.
http://www.kaheel7.com/modules.php?name=News&file=article&sid=557
http://www.jameataleman.org/main/articles.aspx?selected_article_no=1166
http://www.eajaz.org/index.php/component/content/article/86-Twenty-eighth-issue/800-Tailbone
http://www.quran-m.com/firas/arabicold/?page=show_det&id=1888&select_page=2
http://www.alargam.com/seven/seven12a.htm
இந்த ஆய்வின் மூலம் பல விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த நபிமொமி உண்மையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மனிதனின் உடலின் அழியாத இந்தப் பகுதி பற்றி 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.மனிதனைப் படைத்த இறைவனே அவருக்கு அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே அவருக்கு இது தெரிந்திருக்க முடியும்.
{ سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ [فصلت: 53]
நிச்சயமாக இது உண்மை என்பது அவர்களுக்குத் தெளிவாகும் வரை பல பாகங்களிலும் அவர்களுக்குள்ளேயும் நமது அத்தாட்சிகளை அவர்களுக்குக் காட்டுவோம். நிச்சயமாக உமது இரட்சகன் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவன் விடயத்தில் போதுமானதாக இல்லையா? (41:53)
மனிதனின் உடம்பிலேயே இந்த வேதம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தத் தக்க அத்தாட்சிகளை நாம் வெளிப்படுத்துவோம் என்ற குர்ஆன் வசனமும் இங்கே உண்மைப் படுத்தப்படுகிறது.
மறுமை உண்டு மரணத்தின் பின் மனிதன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான் என்ற இஸ்லாத்தின் கொள்கையும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இச்சந்தர்ப்பத்தில் நமது சகோதரர்களின் சிந்தனைக்காக ஒரு செய்தியைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
நமது சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத நபிமொழிகளை மறுப்பது ஆபத்தானது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த ஹதீஸை தவறான கோணத்தில் அனுகினால் நிராகரிக்க முடியும். மண் இரும்பைக் கூட அழித்து விடும் போது மனிதனது எழும்பை அழிக்காது என்பது ஏற்கத் தக்கதாக இல்லை.
ஒரே கப்ரில் பலர் அடக்கம் செய்யப்படுகிறார்கள் இதுவரை எங்கும் இந்த எழும்பு அகப்படவில்லை. எழும்புகள் உக்கி மணணோடு மண்ணாகக் கலந்த பின்னரும் மனிதன் உயிர் கொடுத்து எழுப்பப்படுவானா என காபிர்கள் கேள்வி கேட்ட போது குர்ஆன் அதை மறுக்க வில்லை. பதில்தான் சொன்னது எனவே எழும்புகள் உக்கி மண்ணோடு மண்ணாக மாறிவிடும் என்பதைக் குர்ஆன் ஏற்றுக் கொள்கிறது.
இந்த ஹதிஸ் அதற்கு மாற்றமாக எழும்பின் ஒருபகுதியை மண் தின்னவே மாட்டாது என்கிறது எனவே இந்த ஹதீஸை ஏற்க முடியாது என யாராவது வாதிட்டிருந்தால் கூட அதையும் சிலர் ஆய்வு என்ற பெயரில் ஏற்றிருப்பார்கள். இப்படி வாதிட்டு இந்த ஹதிஸ் மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலை என்று சிந்தித்துப் பாருங்கள்.
இன்று புரியாத சில விடயங்கள் நாலை உறுதிப்படுத்தப்படலாம். எனவே அறிவுக்குப்படவில்லை, நடைமுறைக்கு முரணாக இருக்கிறது, நிருபிக்க முடியவில்லை போன்ற போலிக் காரணங்களைக் கூறி ஹதிஸ்களை மறுப்பது ஆபத்தான வழி முறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
Nice
Al hamdulilah