கனவன் மனைவி இருவரும் தத்தமது கடமைகளை நிறைவேற்றி அடுத்தவர் உரிமையை மதித்து
நடந்தால் அமைதியான குடும்பம் அமையும் நல்ல சந்ததிகள் உருவாகுவார்கள்.
இதன் பின்பும் கணவனின் மோசமான பண்புகளாலோ, மனைவியின் மோசமான பண்புகளாலோ இருவருக்குமிடையிலான உடன் பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டாலே அவர்களுக்கிடையிலான வாழ்க்கையை நிலைபெற செய்ய முடியாவிட்டாலோ கணவன் தலாக் எனும் முடிவை எடுக்கும் முன் கீழ்வரும் படித்தரங்களைப் பூரணமாக நிறைவேற்றுவது கடமையாகும்.
நல்லுபதேசம் செய்தல்:
நல்லுபதேசம் ஈமானுடையோருக்கு பயனளிக்கும் என்ற வகையில் இது அமையும்.
படுக்கையில் இருந்து பிரித்தல்
இது உளவியல் ரீதியான தண்டனையாகும். இதனால் ஒரு பெண் நல்ல வழிக்கு வரலாம்.
காயம் ஏற்படாதவாறு அடித்தல்:
அவ்வாறு அடிக்கும் போது அவ்வடி கடினமாகவோ . பெண்ணின் உடம்பில் அடையாளம் இருக்குமாரோ. வயிறு, நெஞ்சு. முகம் போன்ற நோவினை ஏற்படுத்தும் இடங்களிலோ திருத்த வேண்டும் என்ற நோக்கம் அல்லாமல் நோவினை செய்யும் நோக்கிலோ இருக்கக்கூடாது.
நபிஸல்) அவர்கள் எந்தவொரு பெண்ணுக்கும் வேண்டுமென்றே அடித்ததில்லை என்பது அறிந்த விடயமே!
போர் களத்தைத் தவிர நபி(ஸல்) அவர்கள் தனது கையாள் பணியாட்களுக்கோ . மனைவியருக்கோ அடித்ததில்லை.
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். ‘நபியவர்கள் தனது கைகளால் எந்தவொரு பெண்ணிற்கோ வேலையாளிக்கோ ஏனையவற்றிற்கோ அடித்ததில்லை. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போது தவிர.
(இப்னு மாஜா 1985. அபூதாவூத் 4786
முஸ்லிம்: 2328. தாரமி: 264)
நடுவர்களை நாடுதல்:
கணவனின் குடும்பத்திலிருந்தும் மனைவியின் குடும்பத்திலிருந்தும் நடுநிலையான, புத்தியுடைய இருவரை நாட வேண்டும். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடி அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி செய்யவேணடும். இப்படித்தரங்களைப் பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் சூறா அந்நிஸா: 34-35 போன்ற வசனங்களில் குறிப்பிடுகின்றான்.
இந்நான்கு படித்தரங்களின் பின்னும் அவர்களுக்கிடையில் உடன்பாடு ஏற்படாவிடின் அவள் ஒரு தலாக் சொல்லப்படுவாள். இவ்வாறு தலாக் சொல்லப்பட்ட பின் சேர்ந்து வாழ விரும்பினால் சேர்ந்து வாழலாம். இதை அல்லாஹற் அல் குர் ஆனில் பகரா:230 ஆம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
‘(மூன்றாம் முறையாக) அவளை அவன் விவாகரத்து செய்தால் அவள் வேறு கணவனை மணமுடிக்கும் வரை இவனுக்கு அவள் ஆகுமாவளாக மாட்டாள். அவ்விரண்டாம் கணவன் இவளை விவாகரத்துச் செய்து (முதற் கணவரும். இவளுமாகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணமுடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மணவாழ்விற்கு மீள்வதில் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிந்து கொள்கின்ற சமூகத்திற்கு அவன்இவற்றைத் தெளிவு படுத்துகிறான்.
(பகரா: 230)
இவ்வாறு இரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு. மூன்றாவது தலாக் கூறிவிட்டால் மீண்டும் சேர்ந்து வாழ்வதென்றால், அந்தப் பெண் வேறு ஒரு திருமணம் முடித்து அவள் இயற்கையாகப் பிரிந்தால் மட்டுமே திருமணம் செய்ய முடியும்.
இவ்வாறு தலாக் நிகழ்ந்த சந்தர்ப்பங்களிலும் (வறுமையைதடுக்க குழந்தைக்கான செலவுக் கொடுப்பணவுகளை மேற்கொள்ளுமாறு இஸ்லாம் கணவனுக்கு கடமையாக்கியுள்ளது.
நீங்கள் (உங்கள்) மனைவியரைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்யாமலோ அவர்களை விவாகரத்துச் செய்வது உங்கள் மீது குற்றமில்லை. எனினும் வசதி உள்ளவர்; தனது சக்திக்கு ஏற்பவும். வசதியற்றவர் தனது சக்திக்கு ஏற்பவும் சிறந்த முறையில் அவர்களுக்கு ஏதேனும் வசதியை அளித்து விடுங்கள். (இது) நன்மை செய்பவர்கள் மீது கடமையாகும்.’
(2:236)
கணவனுக்கு செலவு செய்ய முடியாத அளவு வறுமை காணப்பட்டால் அவனுக்கு குழந்தைக்கான கொடுப்பணைவை வழங்க முடியாவிட்டால் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளை வழங்கி கண்காணிக்கக் கூடியவர்களை அரசாங்கம் நியமிப்பது கடமையாகும்.
இதன் மூலம் குழந்தை தடம் புரள்வது தடுக்கப்படும். இது தனிப்பட்ட முறையில் நல்லவர்கள் பின்வரும் ஹதீஸுக்கு ஏற்ப செய்யும் உதவியுடன் இணையும் போது இன்னும் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
‘யாரிடம் வாகனம் உள்ளதோ அவர் இல்லாதவனுக்கு உதவி செய்யட்டும். யாருக்கு கட்டுச் சாதனைங்கள் உள்ளதோ அவர் அதனைக் கொண்டு இல்லாதவனுக்கு வழங்கட்டும்.’
(அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரி ரழி) நூல்: முஸ்லிம்:1728-18
அபுதாவுத் -163)
‘ஸகாத் தவிர்ந்து செல்வத்தில் வேறு ஒரு உரிமையும் (மற்றவர்களுக்கு) உண்டு;.
(நூல்: தாரகுத்தனி 1953. இப்னு அபீபா (10529)
‘யார் தனது அண்டை வீட்டார் பசித்திருக்கும் நிலையில் அவர் அறிந்தும் வயிறு நிரம்பிய நிலையில் இரவைக் கழிக்கின்றாராரோ அவர் என்னை ஈமான் கொள்ளவில்லை ,’
(அறிவிப்பவர்: அனஸ்ரழி )
நூல் தபரானி 751
கட்டிளமைப் பருவத்தினரிடமும், சிறுவர்க்ளிடமும் ஆதிக்கம் செலுத்தம் ஓய்வு நேரம்
கட்டிளமை பருவத்தினர் ஓய்வு நேரத்தை பயணின்றிக் கழிப்பது சிறுவர்களை நெறிபிரழ்வின்பால்இட்டுச் செல்லும் முக்கிய காரணமாகும். ஒரு குழந்தை ஆரம்பம் முதலே விளையாட்டில் ஆர்வம்
உள்ளவனாகவும். சாதனை படைக்கும் ஆசைமிக்கவனாகவும். ஒய்வை விரும்புவதாகவும், இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்பம் அனுபவிப்பதாகவுமே வளர்கின்றது. எப்போதும் அசைந்து கொண்டும். தமக்கு சம வயதையுடையவர்களுடன் பாய்தல். பந்து விளையாடல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களாகவே காணப்படுவர்.
கட்டிளமை வயதையுடையோர் தமது உடலை ஆரோக்கியப்படுத்தி தசைகளை பலப்படுத்தும் உடலை சுருசுருப்பாக்கும் விடயங்களில் கவனம் கொள்வர்.
இவ்வாறு உடலை பலப் படுத்த சுறுசுறுபாக்கவும் அவர்களுக்கு போதியளவு பாதுகாப்பான இட வசதியோ விளையாட்டு மண்டபங்களையோ இவர்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் கெட்ட நன்பர்களை இவர்கள் தேடிச் செல்வர். இதனால் நெறிபிரழ்விற்கு உட்படுவர்.
ஒய்வு நேரங்களை சீரான முறையில் கழிக்க வசதியான இடங்கள் அமையாத போதும் அவர்களின் ஓய்வை சிறந்த முறையில் கழிக்க இஸ்லாம் இபாதத் எனும் ஊடகத்தை முன்வைத்துள்ளது. அதிலும் முக்கியமாக இஸ்லாத்தின் தூணான தொழுகையை முன்வைத்துள்ளது. தொழுகை. மூலமாக உடல். உள குண ரீதியான பலன்கள் கிடைக்பெறுகின்றது.
அதில் தொழுகையின் உடல் ரீதியான சுருக்கமாக இங்கு கூறுவது பொருத்தமான என எண்ணுகின்றேன்.
கட்டாயமான உடற்பயிற்சி:
ஒரு முஸ்லிம் தொழுகையில் அனைத்து மூட்டுக்களையும், தசைகளையும் அசைக்கின்றான். இதனால் தசைகள் புத்துணர்வு பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீர் பெறுகின்றது. உடலின் எல்லா பாகங்களும் சுறுசுறுப்படைகின்றது.
கட்டமாக்கப்பட்ட சுத்தம்:
ஒரு முஸ்லிமின் தொழுகைக்கு முன்னர் வுழு எனும் உடல் சுத்தம்கடமையாகும். முடி, வாய், முக்கு, பற்கள் சுத்தம் என்பவற்றுடன் உடை. தொழும் இடத்தின் சுத்தம் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது.
நடை பயிற்சி;:
பள்ளிக்கு ஒரு நளைக்கு இரவு, பகல் என ஐந்து விடுத்தம் நடந்து சென்று திரும்பி வருவதனால் உடல்சுறுசுறுப்படைகின்றது. சோர்வு. சோம்பல் அற்றுப் போகின்றது.
எந்தவொரு வைத்தியரிடமும் உணவின் பின்னர் நடை. உடற் பயிற்சி செய்வதைப் பற்றி வினவினாலும் அவர்கள் கூறுவது இரைப்பை நோயோ, ஏனைய நோய்களோ பீடிக்காது என்பதாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு குழந்தைகளுக்கு தொழுகையை ஏவுமாறும். பத்து வயது தான்டிவிட்டால்
அடித்துத் தொழவைக்குமாறும் ஏவியுள்ளார்கள்.
‘உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்தால் அவர்களைத் தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதைத் தான்டினால் அவர்களுக்கு அடித்துத் தொழ வையுங்கள். மேலும், படுக்கையை விட்டும் அவர்களைப் பிரியுங்கள்’
(அபூதாவூத் 495 ஹாகிமதாரகுத்தனி 897)
ஓய்வு நேரங்களில் எவ்வாறு தொழுவது அதில் என்ன ஓதுவது, எத்தனை ரக்அத்துக்கள். அதன் ஒழுங்குகள் அதன் பர்ழ். சுன்னத்துக்கள்’ பற்றி சிறு குழந்தைகளுக்கு வீட்டில் பெற்றோரின் மூலம், பாடசாலையில் ஆசிரியர் மூலம் ஓய்வு நேரங்களில் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.
ஓயவு நேரங்களை சிறந்த முறையில் கழிக்க இபாதத் விடயங்களை காட்டித் தந்தது போன்று வேறு சில செயல் ரீதியான விடயங்களையும் ஓய்வு நேரத்துக்கான தீர்வாக காட்டித் தந்துள்ளது.
அவை குழந்தைகளுக்கு போர்கலை, குதிரைப் பயிற்சி, நீச்சல், பாய்தல், சண்டைப் பயிற்சி. போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பதாகும். இவ்வாறு கற்பதன் மூலம் குழந்தைகள் ஓய்வுநேரத்தை சிறந்தமுறையில் கழிப்பர்.
‘உங்களில் இயன்றளவு பலத்தையும் போர் குதிரைகளையும் தயாரித்து வையுங்கள் அதன் மூலம் அலாஹ்வின் எதிரியையும் உங்கள் எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்.’
(அன்பால்: 60 )
‘(நிராகரிப்பவன் சிறந்தவனா) அல்லது மறுமையைப் பயந்து தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து. சுஜூது செய்தவராகவும். நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுபவரா?
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என நபியேகேட்பீராக! சிந்தனையுடையோர் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.’
(39:9)
உங்கள் குழந்தைகளுக்கு நீச்லையும், அம்பெறிதலையும் சுற்றுக்கொடுங்கள். குதிரையில் பாய்ந்து செல்லப் பழக்குங்கள் ‘ என உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர் ஐந்து விடயங்களை அடைந்து கொள்ளுங்கள். மரணத்திற்கு முன்னர் வாழ்வையும். நோய்க்கு முன் ஆரோக்கியத்தையும் வேலைக்கு முன்னர் ஓய்வையும். வயோதிபத்தற்கு முன்னர் இளமையையும். ஏழ்மைக்கு முன்னர் செல்வத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பர்: இப்னு அப்பாஸ்(ரழி)
நூல் இப்னு அப்ஷையா 34319, நஸாஈ 1832)
‘அம்பு எறியுங்கள் . குதிரை சவாரி செய்யுங்கள். நிச்சயமாக அம்பெறிவதானது குதிரை சவாரியை விட என்னிடம் விருப்பமானதாகும்.