இஸ்லாமானது கனவர் மனைவி கடமைகளையும் உரிமைளையும் போதிய வழிகளையும் முள்வைத்துள்ளது.
அவற்றில் சில,
மனைவி நல்ல விடயங்களில் கவனுக்காகக் கட்டுப்படல்:
“நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை பெண்கள் ஒன்று சேர்ந்து அவர்களில் ஒருவரை நபியவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்பெண் நபியவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் பெண்களின் சார்பாக உங்களிடம் வந்துள்ளேன். ஜிஹாதானது ஆண்கள் மீது அலலாஹ் கடமையாக்கியுள்ளான். அவர்கள் அதில் காயப்பட்டால் கூலி கொடுக்கப்படுவார்கள் அதில் அவர்கள் கொல்லப்பட்டால் (ஷஹிதாக்கப்பட்டால்) அல்லாஹற்விடம் உயிரோடிருப்பர் உணவும் அளிக்கப்படுவார்கள். நாங்கள் அவர்களுக்காக உழைக்கின்றோம். நாம் அந்த நன்மையைப் பெற்றுக் கொள்ள என்ன செய்யவேண்டும?; என விணைவினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கணவனுக்குக் கட்டுப்படுவதும், அவருடைய உரிமைகளில் நிறைவேற்றுவதும் அக்கூலிக்குச் சமனாகும். என நீ சந்திக்கும் பெண்களிடம் எத்திவை எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி)
நூல் : அல் பஸ்ஸார் 5209.
சுஃபுல் ஈமான் 8369)
செல்வத்தையும், தன்னையும் பாதுகாத்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது, “ஒரு மனிதனின் சிறந்த புதையல் என்னவென்று உங்களுக்குக் கூறட்டுமா! ஸாலிஹா மனைவி. நீ அவளைப் பார்த்தால் உன்னைமகிழ்விப்பாள். நீ அவளுக்கு ஏவினால் அவள் கட்டுப்படுவாள். நீ அவளை விட்டும் மறைந்தால் உனது செல்வத்தையும் அவளையும் (கற்பையும் ) பாதுகாத்துக்கொள்வாள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)
நூல்: அபூதாவூத்164)
(குறிப்பு: இந்த அறிவிப்பு பலவீனமானது என அறிஞர் அல்பானி (ரஹ்) அவரகள் குறிப்பிடுகின்றார்கள்.
கணவனின் அழைப்பை மறுக்கக் கூடாது
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். கனவன் மனைவியை படுக்கைக்கு அழைத்து மனைவி அவரிடம் செல்லாவிடின் அவள் கோபத்துடன் இரவைக் கழித்தால் காலையாகும் வரை அப்பெண்ணை மலக்குகள் சபிப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹரைரா (ரழி) நூல்: புகாரி 2237. 5193 . முஸ்லிம்- 1436-120)
கணவன் தனது மனைவிக்கும் குழந்தைகளுக்குமான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான வழிகளை மேற்கொள்வது கட்டாயமாகும். அல்லாஹ் அல்குர்ஆனிலே. “அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமையாகும்.” என்கின்றான் .
(பகரா:23)
நபி (ஸல்) அவர்கள். – பெண்கள் விடயத்தில் அல்லாஹற்வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதத்தைக் கொண்டு அவர்களை ஏற்றுக் கொண்டீர்கள். அல்லாஹ்வின் சொற்களைக் கொண்டும் அவர்களை ஹலாலாக்கிக் கொண்டீர்கள். அவர்களுக்கு
நல்ல முறையில் ஆடை உணவு வழங்குவது உங்களது கடமையாகும்” என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்ரழி )
நூல்: முஸ்லிம்1218-147)
வீட்டு விடயங்களில் கணவன் மனைவியுடன் கலந்துரையாடல்.
பெண் பிள்ளைகள் விடயத்தில்உங்கள் மனைவியுடன் கலந்துரையாடுங்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹற்மத் 4905, அபூ தாவூத் 2095)
குறிப்பு: (அந்த அறிவிப்பு பலவீனமானது என அறிஞர் இமாம் அல்பாணி (ரஹ்) அவர்களும் ஹஸனானது என சுஅய் அல் அர்னாஊத் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கணவன் மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல்
அல்லாஹ் கூறுகின்றான். “அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடாத்துங்கள். நீங்கள் அவர்களிடம் ஒன்றை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அதிகமான நலவுகளை வைத்திருப்பான்.
(அந்நிஸா: 19)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்தில் சிறந்தவராவார்.
மேலும். நான் எனது குடும்பத்திற்கு சிறந்தவர்” என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி)
நூல்: இப்னுமாஜா 1977. திர்மிதி 3893
வீட்டு விடயங்களில் கணவன் மனைவிக்கு உதவி செய்தல்
அஸ்வத் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி)
அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்.
ஆயிஷா(ரலி) (புகாரி: 676, 5363)
மனைவியின் சில குறைகளைக் கண்டு கொள்ளாதிருத்தல்
மனைவியின் பலவீனங்களைக் கண்டு கொள்ளாதிருத்தலும் அவசியமாகும். குறிப்பாக அவளிடம் சில குறைகளைக் கண்டால் நிறைகளைக் கண்டு திருப்திப்படக்கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு
முஃமினான ஆண் தனது முஃமினான மனைவியைப் பிரிந்து விட வேண்டாம். அவளிடம் ஒரு குறையை அவன் வெறுத்தால் அவளது நிறைகண்டு திருப்தியடையட்டும் என நபியவர்கள் நவின்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹரைரா (ரழி) ஆதாரம்: முஸ்லிம் (1469-61)
மேலே கணவன், மனைவி கடமைகளில் முக்கியமான கடமைகள் பற்றிப் பார்த்தோம். இக்கடமைகளப் பேணுவதால் பிளவு விடுபட்டு உடன்பாடு ஏற்படும். வெறுப்பு நீங்கி அன்பு மலரும்.அந்த அன்பு நிறைந்த சூழலில் நல்ல சந்ததிகள் உருவாகுவார்:
தொடரும் இன்ஷா அல்லாஹ்.