உயரிய உடல் நலத்துடனும் உன்னத ஈமானிய பலத்துடனும் வாழ வல்ல நாயன் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக!
எனது இணையத்தளத்துடன் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் நான் மகிழ்வடைகின்றேன்.
அல்லாவின் அருளால் 1990 களில் இருந்தே நான் எழுதி வருகின்றேன்.மத்ரஸாவில் ஓதிக் கொண்டிருக்கும் போதே தஃவா களத்திலும் இருந்து வந்தேன்.ஆனால் எனது உரைகள் பெருமளவில் பதிவு பன்னப்பட்டதில்லை.எழுத்துக்கள் பதிவாக உள்ளன.அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும்,இஸ்லாத்தின் தூதை நமக்குள் பரிமாரிக் கொள்ளவும் இந்தத் தளம் பெரிதும் உதவும் என் எண்ணுகிறேன்.
இஸ்லாம் அல்லாவால் எமக்குத் தரப்பட்ட வாழ்க்கை நெறி. இது யாருடைய தனியுடைமையும் கிடையாது.நான் கற்றதையும் சரி என உணர்ந்ததையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எனது கருத்துக்களிலும் தவறு இருக்கலாம்.அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டும் கடமையும் உரிமையும் உங்கள் அனைவருக்கும் உள்ளது.
மஸாயில் விடயங்களில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.இஜ்திகாதுடைய விடயங்களிலும் மாற்றுக் கருத்துக்கள் வரலாம் இவற்றில் நான் எனது கருத்தை முன்வைக்கும் அதே வேலை மாற்றுக் கருத்துடையவர்களையும் மரியாதையுடன் நோக்கும் மனோ பக்குவம் உடையவன்.எனது எழுத்துக்களில் இந்த தாக்கம் நிச்சயம் இருக்கும்.இதில் கூட எனது பார்வையில் பலவீனம் இருந்தால் சுட்டிக்காட்டப்பட்டால் நன்றியுடன் ஏற்றுக் கொள்வேன். அகீதா விடயத்திலோ ,அடிப்படையான விடயங்களிலோ நான் தவறு விட்டால் அவசியம் சுட்டிக் காட்டுங்கள் தட்டிக் கேளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இலங்கை முஸ்லிம்கள் காலா காலமாக சந்தித் சவால்கள் தொடர்பான சில கட்டுரைகள் இதில் இடம் பெரும்.அவை தற்போது அவசியமற்றவை போல் தென்பட்டாலும் எமது வரலாற்றைப் பாதுகாக்கும் முயற்ச்சியாக அது அமையும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
வழமையாக வலைத்தளத்திற்கு வாருங்கள்
வஸ்ஸலாம்
_-_-_-_-_-_-_
அன்புக்குரிய சகோதர்களே
அல்லாஹ்வின் பேரருளால் எனக்கென தனியானதொரு இணையத்தளத்தினை ஆரம்பிக்கவுள்ளேன் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றேன்.இந்த தொழில்நுற்பத் துறையில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை.எனக்கென தனியான ஈமையில் ஜடி கூட இல்லாமல் இருந்தேன்.எனது தமிழக பயணத்தின் போது அன்பு நண்பர் முபாறக் ஸலபி அவர்கள் தான் எனக்கு தனி ஈ-மையில் ஓப்பன் பன்னித்தந்தார்.அதன் மூலம் பல தஃவா பணிகளைச் செய்ய முடிந்தது.
அதன் பின் சிலர் எனக்கு தனி முகநூலைத் திறந்து தந்தாலும் அதை நான் பயன்படுத்தவில்லை.இறுதியில்
எனக்கென தனியான இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என பல நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இருப்பினும் அது கை கூடவில்லை.நான் 1994 லில் இருந்து உண்மை உதயம் இஸ்லாமிய இதழின் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றேன்.எனது பொறுப்பில் சுமார் 175 இதழ்கள் வெளிவந்துள்ளன.அவற்றில் 600 க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளேன். கால வெள்ளத்தில் அவை கரைந்து சென்றுவிடாமல் காப்பாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இந்த கட்டாயத்தின் காரணத்தினால் என் மீது அன்பு கொண்ட ஒரு சகோதரரின் தனிப்பட்ட முயற்சியால் இந்த இணையத்தளம் உருவாகின்றது.
எனது முக நூல் லைக் பேஜ்:
https://www.facebook.com/…/Ismail-Salafi-O…/
எனது இணையத்தளம்:
http://www.facebook.com/
இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் இணையத்தள பணிகள் முழுமை பெற்றுவிடும் .எனது இணையப்பணி தொடர உங்கள் அனைவரினதும் துஆக்களையும் ஒத்துழைப்புக்களையும் நான் வேண்டி நிற்கின்றேன்
நிச்சயம் நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்
என்றும் அன்புடன்
இஸ்மாயில் ஸலபி
Assalamu alaikum,
Allah ungalukku maarka panihalukkaaha neenda aayulai tharuwaanaha,
Sorry for typing in english.
Imam Ibnu taymiyyah rah, Awarhal oru sufi endrum awarhal imam abdul kadir jeelani poandrawarhalai puhalnthu koorinaarhal endrum,
Soofithtuwaththil kaanappaduhinra sila nilaihalaana – Fanaa, kashbu, poanrawatrai kooda angeehariththaarhal endrum
Niraya soofi thalangal pahirangamaaha pirachchaarm seyhinrana.
ithatkaana nalla wilakkaththai tharawum.
iavai sila awwaraana links
http://www.sunnah.org/tasawwuf/tasawwuf_taymiyya.html
http://naqshbandi.org/teachings/topics/imam-ibn-taymiyya-about-saints-and-sainthood/
https://www.deoband.org/2015/12/tasawwuf/shariah-and-tariqah-tasawwuf/shaykh-al-islam-ibn-taymiyyah-sufism-part-two/